பக்கம்:குப்பைமேடு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

205

அவர் மேல் தவறு இல்லை. தெரியாமல் ஒரு மனை வாங்கி வீடு கட்டத் தொடங்கி விட்டார். அது இழுத்துக் கொண்டே போகிறது என்று அவர் பக்கம் நின்று பேசி னாள்.

மத்திய தரக் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள புது வியாதி இது என்பதை உணர முடிந்தது. ஆழம் தெரியாமல் ஏன் காலை விட வேண்டும்?

கட்டும்போது தெரிவது இல்லை. கொஞ்சம் விளம்பரப் பிரியர். கதை எழுதுபவர் மற்றவர்களிடம் எடுத்துக் காட்டி அனுதாபம் பெற ஆசைப்படுவதுபோல இவரும் தாம் கட்டும் வேலையில் தன் நண்பர்களை அழைத்து வந்து காட்டு வார். இப்பொழுது. இது செய்யாவிட்டால் அப்புறம் ஒன்றும் செய்யமுடியாது’ என்று அறிவிப் பார்கள்.

'ஒட்டுக் குளியல் அறை' என்பதை ஒவ்வொரு படுக்கை அறைக்குப் பக்கத்தில் வைக்க அதற்கே ஏகப்பட்டசெலவு, ஏன் ஒன்று போதுமே ஒரு நாளைக்கு அரைமணி நேரங் கூடப் பயன்படுத்துவதில்லை. இதற்கு ஏன் தனி அறை கள்?' என்று சொல்வேன்.

'உனக்குத் தெரியாது. இதுதான் நடைமுறை என் பார். கொல்லைப்புறம் என்ற சொல்லை மாற்றி அதற் கெல்லாம் படுக்கைப் புறம்' என்று பெயர்வைக்கும் காலம் இது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

'தரையில் வெறும் சிமெண்ட் போட்டால்போதும். யாரும் வழுக்கி விழுந்து கால் ஒடியத்தேவை இல்லை" என்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/207&oldid=1116123" இலிருந்து மீள்விக்கப்பட்டது