பக்கம்:குப்பைமேடு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

217

யும். டாக்டர் ரகு என்னை அழைத்துச் சென்றான். தான் அவரிடம் அறிமுகப்படுத்துவதாகச் சொல்லி அழைத்துச் சென்றான்.

புதிய ஆள் ஒருவர் உடன் வந்திருப்பதை அவர் விரும் பவில்லை. என்றாலும் ரகுவோடு சென்றதால் என்னை வரவேற்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். அவர் மீசை யைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதற்கு நிறம் இயற்கையா, செயற்கையா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சின்ன சந்தேகம்தான்.

பாண்டியன் ஒருவன் தன் மனைவியின் கூந்தல் மணம் இயற்கையா, செயற்கையா என்ற ஒரு வினாவைத் தொடுத்துப் புலவர்களுக்குத் தேர்வு வைத்தான். அவன் கருத்தை உணர்ந்து ஒரு புலவன் கூந்தலுக்கு மணம் இயற்கை என்று பாடிவிட்டானாம். அப்படிச் சொன் னால்தான் அவன் பரிசில் கொடுப்பான். சில அதிகாரிகள் அமைச்சர்கள் கேட்கும் வினாவிற்குத் துதி போடுவது போல அவன் பாடி வைத்தான்.

உடனே நக்கீரர் எழுந்தார். பெண்ணுக்குக் கூந்தலின்

மணம் செயற்கைதான் என்று வாதாடினார். 'நீ வழி படும் பார்வதியின் கூந்தலுக்கு?'

'அவளுக்கும் அப்படித்தான்' என்றார் நக்கீரர்.

'நீ விரும்பித் தழுவும் உன் காதலிக்கு?' என்று இறை வன் திருப்பிக் கேட்டார்.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/219&oldid=1116145" இலிருந்து மீள்விக்கப்பட்டது