பக்கம்:குப்பைமேடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ராசீ

"இதை நன்கு புரிந்து கொண்டால் சமயத்தில் கோட் பாடுகள் பேதங்கள் வளராது' என்று தெரிவித்தேன்.

'நாங்கள் காதல் மணத்தை ஆதரிக்கிறோம். இதற்கு மேல்நாட்டுக் கலாச்சாரம் காரணம்' என்றார்.

"மிகவும் முற்போக்காக இருக்கிறீர்கள்' என்றேன்.

"இருந்தாலும் பாதிரியாரைக் கலந்தே முடிவு செய் வோம்' என்றார்.

"ஏன் உங்க மகன் காதல் கீதல்”

"இதுமாதிரி இதுவரை இல்லை.

யாராவது ஒரு பெண்ணைப்பார்த்தால் அவன் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்' என்றார்.

முதலில் புரியவில்லை; பிறகு புரிந்து கொண்டேன்.

அவன் தலை குனிந்து கொள்வான் என்பதை இந்தக் கனிந்த மொழியால் கூறினார் என்பதை அறிந்தேன்.

'அவன் தலை நிமிர்ந்து விட்டது' என்று சொல்லத் துடித்தேன்.

'உமக்கு எப்படித் தெரியும்' என்று கேட்டால் என்ன

செய்வது; திகைத்தேன்.

'என் பையன் அப்படித்தான் என்ன செய்வது?" என்றார்; அதைக் கேட்டு நகைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/34&oldid=1113004" இலிருந்து மீள்விக்கப்பட்டது