பக்கம்:குப்பைமேடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

37

திண்ணை காலியாக இருந்தால் அந்த வீட்டுக்காரர் பண்ணையார் ஆகிவிடுகிறார். நாலுபேர் மதித்துப்பேச வருகிறார்கள். அதற்காகவாவது வீட்டுக்கு ஒரு முற்றம் தேவை என்று பட்டது.

எழுதுகிறவனை யாரும் தொழிலாளியாக மதிப்பது இல்லை. அவனுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை, எழுதிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து விடு கிறார்கள்.

'நேரம் பொன்னானது' என்று எழுதி வைத்தால் என்ன ?

என் வீடு பொன்விளையும் களத்துாரா என்ன? அதற்குப் பேச்சு தடையாவதற்கு? பேச்சுதானே என் மூல தனம், மற்றவர்கள் பேசினால்தான் அவர்களை அறிய முடிகிறது. பாத்திரங்கள் மனத்தில் பதிகின்றன. அதற்கு இந்த வீண்பேச்சு தேவைப்படுகிறது, அது என் தொழி லுக்கு முதற்பொருளும் ஆகும், அதனால் அவரை விலக் குவது இல்லை; ஒதுங்குவதும் இல்லை; யாரையும் கண்டு ஒதுங்கும் பழக்கம் என்னிடம்இயல்பாக இருந்ததுஇல்லை; சோம்பலும் சுகமும் இணைபிரியாத சகோதரர்கள் இதுவும் ஒருவகை சோம்பல்தான், சுகம் கிடைக்கிறது.

-10

யாரும் நோக்கம் இல்லாமல் சந்திப்பது இல்லை, பேசு வதும் இல்லை. போகும்போது வந்த காரியம் இது என்று தெளிவுபடுத்துவார்கள். உண்டியில் இருந்த காசு கலகல வெனக் கொட்டியதுபோல இருந்தது அவர் பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/39&oldid=1113015" இலிருந்து மீள்விக்கப்பட்டது