பக்கம்:குப்பைமேடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ராசீ

'இதற்கெல்லாமா அவர்களைக் கேட்பது: என்றார்.

'சின்ன விஷயங்களைக் கேட்டால் பெரிய விஷயத் தைக் கேட்கத் தேவை இருக்காது' என்றேன்.

"ஏன் அவர்கள் மிகவும் அடக்கமானவராக இருக்கி றார்களே நீங்கள் சொல்வது எதிர்க்க மாட்டார்களே' என்றார்.

'பெண் அவளுக்கு காமம் ஒன்றுதான்; வடிவங்கள் வேறு அறிவில் கலைமகள்; அழகில் திருமகள்; எதிர்ப்பில் மலைமகள்: மொத்தத்தில் அறிய முடியாத பரம்பொருள்' என்றேன்.

என் உவமைகளையும் தத்துவத்தையும் கேட்டு எனக்கு எழுதத் தெரியும் என்பதை ஒப்புக் கொண்டார்.

"வந்தபிறகு சொல்லிக்கொள்ளலாமே" என்றார்.

வருமுன் தெரிவிப்பவன்தான் அறிவாளி' என்றேன்.

'அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்.

'சுகவாசத்திற்குப் போய் இருக்கிறாள்' என்றேன்.

'சகவாச தோஷம்' என்றார்.

‘'எது?' என்றேன்.

'நீங்கள் பழகும் தமிழ்;

அது எதுகை மோனைப்பட பேச வைக்கிறது'

"அது தமிழ்வாசம்' என்றேன்.

'நீங்கள் வாசன்' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/42&oldid=1113131" இலிருந்து மீள்விக்கப்பட்டது