பக்கம்:குப்பைமேடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

41

'உங்கள் நேசன்' என்று சிரித்துப்பேசி அனுப்பி வைத்தேன்.

அவர் ஒரு காச நோயாளி என்பதை அவர் இருமலில் இருந்து தெரிந்து கொண்டேன். இடை இடையே வாக்கி யங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

என் மனைவியிடம் மதிப்பு வைத்திருந்தேன், அவளைக் கேட்டுச் செய்வது வழக்கம் ஆகிவிட்டது. அதனால் அவளை மதிக்கிறேன் என்ற மனநிலை ஏற்படு கிறது. இந்த உரையாடல்கள் சில சமயம் அவசியம் ஆகின்றன. மனைவி என்றால் ஏதாவது பேசித் தொலைக்க வேண்டுமே அதற்கு இந்தச் சின்ன விஷயங்கள் தேவைப்பட்டன.

அவர் கிறித்தவர், விவிலிய வாசகம் அவர் சொற்களில் இடம் பெற்றன.

'முடியாது' என்று சொல்லி அவரை முறியடிக்க விரும்பவில்லை. அதனால் எதையும் சாதிப்பது இல்லை, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி வந்த நான் மற்றவர் கள் சொல்வது கேட்டுச் சிந்தித்து முடிவு எடுக்கப் பழகி விட்டேன்; வாதங்கள் வெற்றி தருவதில்லை, பிடிவாதம் பிழைபட்ட ஒன்றாகும், அதனால்தான் அவரிடம் இவ் வாறு கூறித் தற்காலிகமாக அடக்கி வைத்தேன், இத் தகைய பண்பாடு என் மனைவியின் எதிர்ப்பில் வளர்த்துக் கொண்டேன்.

-11

அச்சகம் என்பது வெறும் இயந்திரங்கள் தொழிலகம் மட்டும் அல்ல, சக தொழிலாளர் ஒரு சிலரிடம் பேசும்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/43&oldid=1113132" இலிருந்து மீள்விக்கப்பட்டது