பக்கம்:குப்பைமேடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

69

வெளியே விளம்பரத்துக்காகப் போட்டோக்காரர் களை வைத்துக்கொண்டு துப்புரவு செய்வதாகப் படம் எடுத்துப் போட்டு விளம்பரம் தேடிக் கொள்ளும் மேலி னத்தைச் சார்ந்தவள் அல்ல அவள் விளம்பரம் இல்லாமல் விரும்பி இத்தொழிலை ஏற்றுக் கொண்டாள். அதற்கு சமூக அங்கீகாரம் கிடைக்குமா? அதன் முதற்படி அவள் விரும்பிக் காதலித்த இளைஞனிடம் சோதனைக்குத் தன்னைக் உட்படுத்திக் கொள்கிறாள் அதுவும் எதிர் பாராத சந்திப்புத்தான், அந்தஎதிர் வீட்டுப்பெரியவர் அவ ளிடம் பேசிச் சில கட்டளைகள்' இட அவள் மறுக்க அதைக் கண்டு இடையில் வந்த அப்பெரியவரின் மகன் அவள் மேனி அழகில் தன்னைப் பறிகொடுத்து அதற்குக் காதல் என்று பெயர் சூட்ட நாடகம் தொடர்கிறது.

அவர்களும் நம்மைப்போலத்தா ன்; ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் காதலித்து விட்டனர். அந்தப் பெண் எப்படிப்பட்டவள், அடக்கம் ஒடுக்கம் உடையவளா,இடுக்கண் வந்தால் நடுக்கம் காட்டாதவளா என்றெல்லாம் அவன் எண்ணிப்பார்க்கவில்லை, உன்னைப் போலவே முரட்டுப் பிடிவாதம் அவளிடம் இருக்கிறது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவளிடம் சிறிதும் இல்லை இது ஒரு புதுவகைப் புரட்சியாக இருக்கிறது.

அவருக்குத் தன் மருமகள் ஒரு துப்புரவுத் தொழிலாளி என்று சொல்வதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். மானம் என்ற அதிகாரத்தில் பத்துக் குறளையும் ஒப்புவிக்கிறார். குடும்ப மானம் என்ன ஆவது என்று ஒப்பாரி வைக்கிறார். நிதானமாக எதையும் சிந்திக்க வேண்டும் என்கிறார்.

ஒரு தொழிலாளிப் பெண் உடல் உழைப்புக்காரி தன் மருமகள் ஆவதை அவர் ஏற்க மறுக்கிறார். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/71&oldid=1114106" இலிருந்து மீள்விக்கப்பட்டது