பக்கம்:குப்பைமேடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

77

குழந்தையின் வளர்ப்புக்கு இருவர் உழைப்பும் தேவை. இருவர் அன்பும் தேவை; சொந்தம் அவருக்கு இருந்திருக் கலாம், குத்தகைக்காரருக்கு விளைவு உடைமை என்பது சட்டம். அதனால் நீங்கள் இதற்குத் தந்தை என்று துணிந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பின்னால் ஒரு சிக்கல் வரக் காத்து இருக்கிறது. என் மாஜி கணவர் இன்று அரசியல் படி யில் மிக உயரத்தில் ஏறிவிட்டார். பணத்தில் மிதக்கிறார். தவறுகளின் படிக் கட்டுகள் அவர் ஏறுவதற்குப் பயன்பட்டு வருகின்றன.

யாருக்குப் பிறந்தது என்று சட்டம் ஆராயும். பிறக் கும் போது யார் எனக்குக் கணவர் என்பதுதான் அளவு கோல் ஆகும்; எனவே நீதி மன்றம் அதிகாரத்துக்கும், அரசியலுக்கும், ஆதிக்கத்துக்கும் பணியாது' என்று எழுதி இருந்தாள்.

மற்றும் தொடர்ந்து எழுதி இருந்தாள்.

'எனக்கும் உங்களுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந் தது. காதல் செய்தே கரம் பிடித்தோம் என்றுசொல்லிவிட லாம்; இந்தக் கற்பனை உங்களுக்கு ஏற்படலாம்; கதை எழுதுவதால் இப்படி வாதிடலாம் என்று நீங்கள் நினைக் &56\}fT Ls).

பொய்த்து உயிர் வாழ்வதை விட முன் அவர் சொன்ன படி அவர் தலைவர் காலில் விழுந்து நான் கசப்பு இல் லாமல் ஒட்டி வாழ்ந்திருக்கலாம்; இன்று அவர் கோடிக் கணக்கில் பொருள் ஈட்டி இருக்கிறார் என்று கேள்விப்படு கிறேன், அதை நான் இன்றும் மதிக்கவில்லை; எனக்குக் கொள்கைதான் பெரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/79&oldid=1114142" இலிருந்து மீள்விக்கப்பட்டது