பக்கம்:குப்பைமேடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

ராசீ

'ஏன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். நான் ஏமாற் றப்பட்டேன் என்பதாலேயா? நீ என்னை உதறித் தள்ள முடியாது என்பதாலேயா?"

பின் அவளே உள்ளே சென்று மற்றவர்களுக்கும் அந்தப் புது வரவை அறிமுகம் செய்து வைத்தாள்.

படைப்பு என்றால் இதுதான் என்று பாராட்டினார் கள். எழுதுவது படைப்பு என்று சொல்கிறாய்; அதில் எத்தனை உடைப்புகள், இலக்கணப் பிழைகள், கருத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள் அது வரும்போது அச்சுப் பிழைகள். அதைப் படைப்பு என்று சொல்வது வெறும் கண்துடைப்பு' என்று விமரிசனம் செய்தனர்.

குழந்தையை உள்ளே வைத்துவிட்டு வீட்டை ஒரு நோட்டம் பார்த்துவிட்டு என் சமையல்காரன் செய்து வைத்த சாப்பாட்டில் ஒரு கூட்டல் வேண்டும் என்று சொல்லிவிட்டு அவளும் வந்து உட்கார்ந்தாள்.

'அழைப்பிதழ் அச்சாகி விட்டதா என்று வந்த வுடன் கேட்டாள்.

"அதை எழுதுவதற்குத்தான் இங்கே கூடியுள்ளோம்' என்று பையன் பதில் சொன்னான்.

- 20

முன்னால் எல்லாம் அவன் அதிகம் பேசமாட்டான்.

அவன் முத்திக்கொள்வது எங்களுக்கு ஒரு மாறுதலாகப் பட்டது. மகன் பிறந்த செய்தி பறைசாற்றினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/92&oldid=1114939" இலிருந்து மீள்விக்கப்பட்டது