பக்கம்:குப்பைமேடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

95

பான்மையாக இருக்கலாம். அதை வைத்து அது அவர் களுக்கே உரியது என்று கூற முடியாது. மதம் எல்லை கடந்தது.

எந்த மதத்தையும் யார் வேண்டுமானாலும் மேற் கொள்ளலாம்; என்றாலும் அவை தனித்தனி கலாச்சாரங் களையும், பழக்க வழக்கங்களையும் உண்டாக்கி இருக் கின்றன. ஒரு பள்ளியில் சேர்கிறவர் அந்தப் பள்ளிக்கு ஏற்ற உடைகள் உடுத்துகிறார்கள். ஆனால் கற்கும் கல்வி இன்றுதான். அதே போலத்தான் புறத்தோற்றத்தில் வேறு '-டு இயங்கலாம்; அக உள்ளீடு அனைத்தும் ஒன்றுதான்.

பகைவனை மதித்து அருட் செய்யும் பண்பையும், சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் அனைத்துச் சமயங்களும் வளர்க்கின்றன.

காதல் தனிமனிதனின் உணர்வு. அது இருவரைப் பிணிக்கிறது. அதனால் அவர்கள் தம் சமயத்தைவிட்டுவிட வேண்டும் என்பது இல்லை. தனி மனிதனின் போக்குகளை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறு. சமயம் மட்டும் அல்ல. அரசியல் வாழ்க் கைகளும் அப்படித்தான். தந்தை ஒரு கட்சி என்றால் மகன் ஒரு சட்சியாக இருக்கலாம்.அது அவர்கள் தனி உரிமை அதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது இல்லை.

சாதிகள் காதல் மணத்தில் சாகின்றன; ஆனால் அவர்கள் சாதிகளை விடுவது இல்லை. அதை மறந்து ஒன்றுபடுகிறார்கள். அதே போலத்தான் மதங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/97&oldid=1114944" இலிருந்து மீள்விக்கப்பட்டது