பக்கம்:குமண வள்ளல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

குமண வள்ளல்

இத்தகைய நிலையில், அவரிடம் ஒரு நாள் குமணன் என்ற சிற்றரசனுடைய வள்ளன்மையைப்பற்றி யாரோ ஒரு புலவர் சொன்னார். கொங்கு நாட்டில் முதிரம் என்னும் மலைக்கு அருகில் ஓர் ஊரில் அவன் வாழ்கிறான் என்று கேள்வியுற்றார். புலவர்களுக்கு மிகுதியாக வழங்கும் பெருமான் அவன் என்றும், அவனை அணுகினவரிடம் வறுமை விடை பெற்றுக் கொண்டு ஓடிவிடும் என்றும் செய்தி சொன்னவர் பாராட்டினர். அவ்வாறு அவன் செய்வது உண்மை என்பதை வேறு சிலரும் சொன்னர்கள். எல்லா வற்றையும் கேட்ட பெருஞ்சித்திரனுர், குமணனை அணுகி அவனுடைய அன்பைப் பெற வேண்டும் என்ற ஆவலை உடையவரானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/14&oldid=1361528" இலிருந்து மீள்விக்கப்பட்டது