பக்கம்:குமண வள்ளல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

குமண வள்ளல்

குக் காட்டுவாள். அதுவும் ஒரு கணந்தான் பயன்படும். மறுபடியும் அவன் அழுவதைக் கண்டு அவள் நொந்து சாம்புவதைக் கடவுளே அறிவார். ‘உன் அப்பா, போனவர் வரவில்லையே! அவர் வந்தால் அவரை நீ எப்படிக் கோபிப்பாய்? எப்படி முகத்தை வைத்துக்கொள்வாய்? எங்கே காட்டு’ என்று கூறிப் போது போக்க முயல்வாள். இப்படி யெல்லாம் அல்லல் உழப்பவள் தன் துன்பம் தீர்ந்து சுகம் அடையும்படி மிகுதியான பொருளைக் கொடுத்து என்ன விரைவில் அனுப்பவேண்டும். இந்த உலகத்தில் தங்கள் புகழ் ஓங்குக என்று வாழ்த்துகிறேன். யான் போய் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து இன்புறச் செய்துவிட்டு மீட்டும் இங்கே வருகிறேன். கருணை புரிய வேண்டும்.”

இதைக் கேட்ட குமணன் உருகிப் போனன். புலவர் தம் கருத்தைப் பாட்டிலும் அமைத்துச் சொல்லி விட்டார்.

இல்உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்உளைக் குடுமிப் புதல்வன், பன்மாண்
பால்இல் வறுமார்பு சுவைத்தனன் பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறுங்கலம் திறந்து அழக் கண்டு,
மறப்புலி உரைத்தும், மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி, “துந்தையை உள்ளிப்
பொடிந்த நின் செவ்வி காட்டு” எனப் பலவும்
வினவல் ஆனா ளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வம் மிகுத்தனே வல்லே
விடுதல் வேண்டுவல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/44&oldid=1362567" இலிருந்து மீள்விக்கப்பட்டது