பக்கம்:குமண வள்ளல்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரியா விடை

39

[வீடு உணவைத் துறந்திருப்பதனால் வீட்டையே மறந்து வெளியே உறையும் பொலிவற்ற தலைமயிரையுடைய என் புதல்வன் பலமுறை தன் தாயின் பால் இல்லாத வறிய மார்பைச் சுவைத்தும் பாலைப் பெறாமல், கூழையும் சோற்றையும் வேண்டி வரிசையாக உள்ளே ஒன்றும் இல்லாத பாழும் கலங்களைத் திறந்து பார்த்து அழ, அதைக் கண்டு. கொடுமையுடைய புலியின் பேரைச் சொல்லிப் பயமுறுத்தியும், சந்திரனைச் காட்டி நயந்து பேசியும், எதனாலும் அழுகை அடங்காதது கண்டு வருத்தமடைந்து, “உன் அப்பாவை எண்ணி, அவரைக் கோபிக்கும் கோலத்தைக் காட்டு” என்று பல பல கேட்பதை நிறுத்தாதவளாய், கனவில் துன்பம் அடைகிற என் மனைவி பொருள்வளம் பெற்று இன்புறும்படியாக, குறையாத செல்வத்தை மிகுதியாகத் தந்து விரைவில் என்னை அனுப்புதலை வேண்டுகிறேன்.]

இது அவர் தம் இல்லில் தம் மனையாள் படும் பாட்டை எடுத்துரைத்த பகுதி. இதைக் கேட்பவர்கள் யாரானலும், கல் நெஞ்சராக இருந்தாலும், உருகி விடுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.

குமணன் இப்போது உண்மையை நன்றாக. உணர்ந்துகொண்டான். இனி ஒரு கணமும் பெருஞ்சித்திரனாரை நிறுத்தி வைக்கக்கூடாதென்று எண்ணிப் பலவகைப் பொருள்களை ஒரு வண்டியில் போட்டுப் புலவருக்கு ஆடை அணிகளை வழங்கி அனுப்பினான். “நீங்கள் இங்கே அடிக்கடி வருவதாகச் சொன்னதை நினைப்பூட்டுகிறேன். அதைச் சொன்ன பிறகுதான் உங்களை அனுப்பலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதற்குமுன் அந்த எண்ணம் தோன்றவில்லை. தோன்றியிருந்தால் நான்கு நாட்களுக்கு முன்பே விடை கொடுத்து அனுப்பியிருப்பேன். உங்களுடைய