பக்கம்:குமண வள்ளல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லோர்க்கும். கொடு '

51

தன் கணவர் கூறியதைக் கேட்ட அப்பெருமாட்டி அவ்வாறே செய்யத் தொடங்கினாள். வறிய நிலை மாறி வள நிலையில் இருந்த அந்த வீடு இப்போது வண்மை நிலையும் பெற்று விளங்கியது.

புலவர்கள் வறியவர்களாக இருந்ததற்குக் காரண்மே இதுதான். அவர்களுக்குப் பொருள் கிடைக்காமல் இருப்பதில்லை. புலவர்களிடம் அன்பு பூண்ட புரவலர்கள் பலர் இருந்த தமிழ் நாட்டில் புலவர்களுக்கு வேண்டியவற்றை அவர்கள் நல்கிவந்தார்கள். தமக்குக் கிடைத்த பொருளை. இது பல நாளுக்கு இருக்க வேண்டும் என்று சேமித்து வைக்கும் இயல்பைப் புலவர்கள் அறிய மாட்டார்கள். எப்படிக் கிடைத்ததோ, அப்படிச் செலவிட்டு விடுவார்கள். துறவி கையில் கிடைத்த பொருளும் புலவர் கையில் கிடைத்த பொருளும் பலருக்குப் பயன்படும்.

இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெருஞ்சித்திரனார் தம் மனைகிழவோளுக்கு இத்தகைய அறிவுரையைச் சொன்னது வியப்புக்கு உரியது அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/57&oldid=1362580" இலிருந்து மீள்விக்கப்பட்டது