பக்கம்:குமண வள்ளல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

குமண வள்ளல்

அவற்றில் அன்புப் பசை இல்லை; வருத்தமும் இல்லை. ‘ஏன் இவனிடம் வந்தோம்!’ என்று உள்ளுக்குள் வருந்தினார் புலவர்.

“அவரை அண்டிப் பரிசில் பெற்று வாழலாம் என்று புலவர்கள் இருந்தார்கள். அவர்களை அவர் அன்புடன் வரவேற்று உபசரித்தார். நான் வந்தபோது எத்தனை அன்பு காட்டினர் அடிக்கடி வந்து பார்க்கலாம் என்ற ஆசையோடு இருந்தேன். அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. சோறு உண்ணலாம் என்று அடுப்பில் வைத்த பானையில் நெருப்புப் பற்றியதுபோல அவருடைய மறைவுச் செய்தியைக் கேட்கும் துர்ப்பாக்கியம் எங்களுக்கு உண்டாகிவிட்டது. சிறிதும் அறம் இல்லாத கூற்றுவன் முறையற்ற காரியத்தைச் செய்து விட்டான்............”

புலவர் பேசிக்கொண்டிருக்கும்போதே இளவெளிமான் எழுந்தான். உள்ளே சென்றான் சிறிதளவு பொருளை ஒரு கிழியில் வைத்துக் கொணர்ந்தான். “இந்தாருங்கள்; இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். என் தமையனாரிடம் அன்புள்ளவர் என்று சொன்னீர்கள். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இதுதான் நான் அளிக்கக்கூடிய பரிசில்” என்று கொடுத்தான். புலவர் அதை வாங்கிப் பார்த்தார். கீழே வைத்தார். அவர் தலை நிமிர்ந்தது. வெளிமானுடைய பெருந்தன்மையையும் இவனுடைய சிறுமையையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.

‘பரிசில் பெறுவதற்கு நாம் வந்ததாக எண்ணி இந்தச் சிறிய பொருளை நாய்க்கு இரை வீசுவதுபோல அன்பு இன்றிக் கொடுக்கிறானே!’ என்ற கோபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/62&oldid=1362605" இலிருந்து மீள்விக்கப்பட்டது