பக்கம்:குமரப் பருவம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


குழந்தை உலகத்திலே தோன்றுகிறது. அதைக் கண்டு எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. குழந்தை என்று சொன்னவுடனே சாதரணமாக நம் உள்ளத்திலே அன்பு சுரக்கிறது. நாம் அதைப் போற்றுகிறோம். பாலூட்டித் தாலாட்டி அன்போடு அதை வளர்க்கிறோம்.

உலகத்துக்குப் புதிய விருந்தாக வந்த குழந்தை உடலிலும் உள்ளத்திலும் நன்கு வளர்ந்து முதிர்ச்சி பெற்று என்ன என்னவோ அரிய பெரிய செயல்களையெல்லாம் சாதிக்கப் போகின்றது. ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தந்தையும் இவ்வாறு எண்ணி உள்ளம் பூரிக்கிறார்கள். குழந்தையின் மன இயல்பை நன்கறிந்துகொண்டு அதை நல்ல முறையில் வளர்க்கும் பெற்றோர்கள் அதன் வாழ்க்கையிலே வெற்றி கிடைப்பதற்குப் பெரிதும் உதவியாக இருக்கலாம். குழந்தைக்கு இயற்கையாக அமையும் ஆற்றல்கள் அதன் எதிர்காலத்தைப் பெரியதோர் அளவிற்கு நிர்ணயம் செய்யும் என்றாலும் அந்த ஆற்றல்கள்.ஓங்குவதற்கும் மழுங்கிப் போவதற்கும் பெற்றோரும் அவர்களால் பெரிதும் உண்டாக்கப்படும் சூழ்நிலையும் முக்கிய காரணங்களாகும். ஆகையால்தான் பெற்றோர்கள் மனத்தத்துவத்தைப் பற்றியும், முக்கியமாகக் குழந்தை மனத்தத்துவத்தையும் அறிந்திருக்க வேண்டுமென்று இக்காலத்திலே வற்புறுத்திப் பேசப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/4&oldid=1531271" இலிருந்து மீள்விக்கப்பட்டது