பக்கம்:குமரப் பருவம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    குழந்தையின் மனமலர்ச்சியைப் பற்றி, 'குழந்தை உள்ளம் குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்' என்னும் நூல்களிலே விரிவாக விளக்கியிருக்கிறேன். பாரம்பரியத்தின் இயல்பையும் சூழ்நிலையின் முக்கியத்தையும், 'பாரம் பரியம்' என்னும் நூலிலே எடுத்துக்காட்டியிருக்கிறேன். இந்த நூலிலே குழந்தைப் பருவத்தைக் கடந்த குமரர்கள் குமரிகளுடைய மன இயல்பு பற்றியும், அப்பருவத்திலே அவர்களிடம் பெற்றோரும் மற்றோரும் கடந்துகொள்ள வேண்டிய விதத்தைப் பற்றியும் எடுத்தியம்ப நான் விரும்புகிறேன். குழந்தைகள் முதிர்ந்த ஆண்களாகவோ, மங்கைகளாகவோ வளர்வதற்கிடையிலே குமரப் பருவத்தைக் கடந்து செல்ல வேண்டும். அந்தப் பருவத்தின் இயல்பும், குறிகளும், உணர்ச்சிகளும் இங்கே விவரிக்கப்படுகின்றன. இக்கால ஆராய்ச்சிகளால் கிடைத்த உண்மைகளைப் பொதுவாக எல்லோருக்கும் விளங்கும் வகையில் சுவைபட எழுத வேண்டும் என்பதே எனது நோக்கம். மேற்கொண்டு விரிவாகப் படிப்பதற்கும் இது துணை புரியும். குமரப் பருவத்தைப் பற்றிய பொது அறிவும் ஏற்பட இந்நூல் உதவும் என்று நான் நம்புகிறேன்.
                                                      பெ. தூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/5&oldid=1229377" இலிருந்து மீள்விக்கப்பட்டது