பக்கம்:குமரப் பருவம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருப்பமும் துடிப்பும 45 குமரப் பருவத்தினர் இலட்சியவாதிகளாகவே இருப் பார்கள். உலகில் உள்ள குறைகளையெல்லாம் கண்டு ஆத்திரப்படுவார்கள். இந்தப் பருவத்திலே தீவிர வாதம் புரட்சிகரமான கொள்கைகள் எல்லாம் மிகவும் பிடிக்கும். அவற்றைப் பற்றி உணர்ச்சியூட்டுமாறு பேசக்கூடியவர்களின் கருத் துக்கள் அவர்கள் மனத்தில் நன்கு பதிந்து வேலை செய்யத் தொடங்கும். பழைய கொள்கைகளையும் நம்பிக்கை களையும் தள்ளிவிட்டுப் புதியனவும் முற்போக்கான வையுமான கருத்துக்களைத் தாங்கள் கொண்டிருப்பதாகக் குமரப் பருவத்தினருக்கு ஒரு தனிப் பெருமையுணர்ச்சி யும் உண்டாகும். முதிர்ந்த பருவம் வரும்போதுதான் அவர்களுக்கு நிதானமும், எண்ணித் துணியும் ஆற்றலும் ஒழுங்காக அமையும். உலக விவகாரங்களிலும், நாட்டு விவகாரங்களிலும் உள்ள குறைகளை எடுத்துப் பேசுவதில் குமரப் பருவத் தினர் தயங்கமாட்டார்கள். அமைச்சர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் எல்லோரும் இதற்கு ஆட்பட்டுத்தான் தீரவேண்டும். அவர்கள் ம ட் டு ம ல் ல; வீட்டிலே பெற்ருேரும் தப்ப முடியாது. தாய் தந்தையரின் குறைபாடுகள் குமரப் பருவத்தின ருக்குத் தெரியத் தொடங்குகின்றன. அவற்றைக் குறிப் பிட்டு நேராக அவர்களிடம் பேசாது போனலும் நண்பர் களிடமாவது பேசாது விடமாட்டார்கள். அவர்களது நடத்தையின் மூலமாகவும் தங்கள் கருத்தை வெளிக் காட்ட முயல்வார்கள். தம் விருப்பப்படி வீடும். வீட்டு அலங்காரமும் அமைந்திருக்க வேண்டுமென்றும் அவர்கள் ஆசைப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/46&oldid=806596" இலிருந்து மீள்விக்கப்பட்டது