பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

23


வயிறு வெடிக்கச் சிரித்துவிட்டிருப்பாய் அவன் பேச்சைக் கேட்டு."

"ரொம்ப காமிக் பேர்வழியோ ?"

"காமிக்குமில்லை, கத்தரிக்காயுமில்லை; அவன் உலகமறியாதவன். ஆரம்பமே, எப்படித் தெரியுமோ? 'ஏலே! யார்டா அவன் காத்தானா, உட்காரு கீழே. இப்ப, பிரசங்கம் நடக்கப்போவுது, கப்சிப்ன்னு சத்தம் செய்யாமே கேட்கவேணும். எவனாவது எதாச்சும் சேஷ்டை செய்தா தோலை உரிச்சுப்போடுவேன். ஆமாம்!' இதுதான், நாகு! அவன் பிரசங்கம்."

"அட இழவே! இந்தமாதிரி ஆட்களைச் சேர்த்தால் இயக்கம் கெட்டுத்தானே போகும்."

"சேர்க்கறதாவது! நடக்கறதாவது! கூட்டம் நடத்த வேறு வழி கிடைக்காமே இருந்தது, அதற்காக அந்த ஆளை இழுத்துப்போட்டேன். கூட்டம் முடிந்ததும், பத்துப்பேருக்கு மேலே, மிகத் தீவிரமாகிவிட் டார்கள். இனி, யார் தயவும் வேண்டாம்; நாமே கூட்டம் போடலாம் என்று சொன்னார்கள்."

இப்படிப்பட்ட பேச்சுத்தான், பழனி—நாகவல்லிக்கு! வேறு என்ன பேசமுடியும், புதிய பங்களாவைப் பற்றியா, பவள மாலையைப் பற்றியா?

""எங்கே நாகு! செயின்?"

"பள்ளிக்கூடத்தில்!" "என்ன விளையாட்டு இது? கழுத்தே அழகு குன்றிவிட்டது அந்தச் செயின் இல்லாமல், எங்கே செயின் ?"