பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

குமரிக் கோட்டம்


செய் அதைச்செய் என்று நேரிலே கூப்பிட்டுச் சொல்வதற்குப் பதில், குமரியைக் கூப்பிட்டனுப்பி அவள் மூலமாகவே சொல்லி அனுப்புவார். அதாவது, குமரியை அடிக்கடி தம் பார்வையிலே வைத்துக் கொண்டிருக்கச் செட்டியார் ஆசைப்பட்டார். எத்தனை நாளைக்குச் செடியிலே இருக்கும் மலரைப் பார்த்து மகிழ்வதோடு இருக்க முடியும்? ஒருநாள் பறித்தே விடுவது என்று தீர்மான மாகித்தானே விடும்! உலசுமறிந்தவள் மீனா. ஆகவே உருத்திராட்சம் அணிந்தால் என்ன, விபூதி பூசினாலென்ன, நல்ல முகவெட்டுக்காரியிடம், மனம் தானாகச் சென்று தீரும். அதிலும், கள்ளங்கபடமற்ற குமரியிடம் காந்தசக்தி இருக்கிறது, என்பதை அவள் அறிவாள். ஆகவே செட்டியார், குமரியைக் கூப்பிட்டு அனுப்புவது போதாதென்று, மீனாவே சில சமயங்களிலே, குமரியைச் செட்டியாரிடம் போய்ச், சுண்ணாம்பு அரைத்தது சரியா இருக்கா என்று கேட்டுவா, நாளைக்குப் பிள்ளையார் பூஜைக்கு மகிழம்பூ வேண்டுமா என்று கேட்டுவா, என்று ஏதாவது வேலைவைத்து அனுப்புவாள். பாபம், ஒவ்வொரு தடவையும் குமரி தபால் எடுத்துக்கொண்டு மட்டும் போகவில்லை, மையலையும் தந்துவிட்டு வந்தாள் அந்தப் பக்தருக்கு, தன்னையும் அறியாமல். அவள் சேதியைக் கூறுவாள், அவரோ அவளுடைய சுந்தரத்தைப் பருகுவார். எவ்வளவு இயற்கையான அழகு! கண்களிலே என்ன பிரகாசம்! உடல் எவ்வளவு கட்டு! இவ்வளவுக்கும் ஏழை! அன்றாடம் வேலை! அழுக்கடைந்த புடவை! உப்பிரஜாதி (ஒட்டர்)! மாளிகையிலே உலவவேண்டிய சௌந்தரியவதி, என்று எண்ணிப் பரிதாபப்படுவார். ஒருநாள், கையில் சுண்ணாம்புக்கறை படிந்திருந்ததைக் கழுவ எண்ணி, "குமரி! கொஞ்சம்