பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

31


இருவரும் பேசும்போது மற்றப் பெண்கள் இளித்துக் கொண்டு நிற்பார்கள். விடமாட்டாள் மீனா.

"ஏண்டி ! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க."

"ஒண்ணுமில்லையே, அக்கா."

"அக்காவா நானு? இவ கொழந்தை! வயசு பதனாறு."

இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம். சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத்திலைப்பை, இவைகள் அடிக்கடி மீனாமீது தான் விழும். மேஸ்திரி இவைகளை அடிக்கடி வீசுவார், அவள் ஏச மாட்டாள். அவளுக்கு அவன் கொடுத்துவந்த எட்ட ணா கூலி, இந்த விளையாட்டுக்கும் (விபரீதமற்ற) சேர்த்துத் தான்.

ஒரு கெட்ட வழக்கம் மீனாவுக்கு; முடிபோட்டு விடுவாள்! திடீர் திடீரென்று தன் மனம் போன போக்கிலே ஜோடி சேர்த்து விடுவாள், —கற்பனையாகவே! அவளுடைய 'ஆரூடம்' பல சமயங்களிலே பலித்ததுண்டு, "உன் பல் ரொம்பப் பொல்லாதது. ஒன்றும் சொல்லிவிடாதேயடியம்மா" என்று கெஞ்சுவார்கள் மற்றவர்கள்." இல்லாததை நான் சொல்ல மாட்டேன் என்று கூறுவாள் மீனா.

மீனாவின் கண்களுக்குத்தான் முதலில் தெரிந்தது. குமரியின்மீது செட்டியாரின் நோக்கம் செல்வது ! குமரிக்குத் தெரிவதற்கு முன்பே, மீனாவுக்குத் தெரிந்து விட்டது ! குமரி, எந்தப் பக்கத்திலே வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்தப் பக்கம்தான் செட்டியார் அடிக்கொரு தடவை வருவார். மற்றவர்களை, இதைச்