பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

குமரிக் கோட்டம்


கூடியவர் என்று எண்ணியிருக்க முடியும்! காலைமுதல் வேலைசெய்த அலுப்பினால் அவள் குடிசையிலே, கையே தலையணையாகக் கொண்டு தூங்கி இருக்கவேண்டியவள், ஒரு இலட்சாதிகாரியின் மடியிலே ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு இருக்கிறாள்! கைலாயக் காட்சியைக் கனவிலே கண்டு இரசிக்கவேண்டிய நேரத்திலே பக்திமானான செட்டியார், தம்முடைய வாலிப மகன், காதலித்தவளைக் கடிமணம் புரிவேன் என்று சொன்னதற்காக, 'காதலாம், காதல்! ஜாதியைக் கெடுத்துக்கொள்வதா, குலம் நாசமாவதா, ஆசாரம் அழிவதா, ஒரு பெண்ணின் சிநேகத்துக்காக, என்று கனல் கக்கிய செட்டியார், ஒரு பெண்ணை, கூலிவேலை செய்யவந்தவளை, நடுநிசியில், கட்டி முடியாத கோயிலில், 'கண்ணே! மணியே!' என்று கொஞ்சிக்கட்டிக் தழுவிக்கொள்கிறார், அதுவும் அவள் தன்னுடைய நிலையை இழந்து விடும்படியாக மயக்கம் தரும் லேகியம் சாப்பிடும்படி செய்து. செட்டியாருக்கு இவைகளை எண்ணிப் பார்க்க நேரமில்லை; அவருக்கு அளவில்லாத ஆனந்தம்; எத்தனையோ நாட்களாகக் கொண்டிருந்த இச்சை பூர்த்தியாயிற்றே என்ற சந்தோஷம்! இன்ப இரவு அவருக்கு.

இன்ப இரவுக்குக் கடிகாரம் ஏது? கோட்டான் கூவினால்கூடக் குயிலின் நாதமாக வன்றோ அந்த நேரத்தில் தொனிக்கும். கருத்த மேகம் சூழ்ந்த வானமும்கூட, அன்று தனி அழகாகத்தானே காணப்படும்! இன்பத்துடன் அளவளாவும் நாள் அமாவாசையாக இருந்தாலும், பௌர்ணமியாகிவிடுகிறது என்பார்கள். செட்டியாரின் நிலை அதுதான். அவர் மனத்திலே அந்த நேரத்தில் கொஞ்சமும் பயமில்லை. "என்ன காரியம் செய்தோம்! நமது