பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அந்த நாளோ, அவருக்கு அபூர்வமான ஆசிரியன் கிடைத்துவிட்டான். பல திங்கள் படித்துப் பெற வேண்டிய பாடத்தை அவர், ஒரே ஒரு பார்வையின் மூலம் பெற்றார். மகனது மனத்தின் தன்மை அவருக்குப் புரிந்தது. ஆனால் தம் மனத்திலே கிளம்பிய 'காதலை' என்ன செய்வது என்று புரியாமல் சில நாட்கள் இருந்தார். அவர் மட்டுமா—— யாருந்தானே! பிறகு அதற்கும் வழி கண்டார். ஆனால் குறுக்குவழி!

அந்தக் குறுக்குவழி, பெண்களை விபசாரப் பகுதியில் தள்ளும், பயங்கரப் பாதை. குமரிக்கு, அந்த வழியில் நடக்கும் நுழைவுச் சீட்டுதான் கிடைத்தது. ஆனால், அவளுடைய அண்ணனும், இலட்சிய வீரனான, வைதீகரின் மகனும், அவளைக் காப்பாற்றினர். திருப்பணி புரியக் கிளம்பிய வைதீகர், பிறகு நேர்வழி நடந்தார், குமரியுடன்.

அவர்களைப் பற்றிய கதை இது. அவர்கள் வேறு யாருமல்ல, இன்றைய சமுதாய அமைப்பு முறையிலே நாம் காணக்கூடிய, ஒரு சராசரிக் குடும்பம். இனி அவர்களைச் சந்தியுங்கள்.


சி.என். அண்ணாதுரை