பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

51


நெல்மூட்டைமீது சாய்ந்தபடி நித்திரையில் ஆழ்ந்தார். ஆதவன் உதித்தான்!

III

கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேஷ்டையின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந்தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள்; புதியதோர் இடமாகத் தோன்றிற்று. திகைப்புடன் பார்த்தாள், செட்டியார்மீது சாய்ந்துகொண்டிருப்பதை. "ஐயோ" என்று அலறியபடி எழுந்திருக்கலானாள். செட்டியாரோ, "அன்பே!" என்று கூறி, அவளை மீண்டும் தம்மீது சாய்த்துக்கொண்டார்.

"பாதகா! பாவி! மோசம் போனேனே! என்னமோ தின்னக் கொடுத்துவிட்டு, என்னை இக்கதிக்கு ஆளாக்கினாயே, நீ நாசமாப் போக " என்று வசைமொழியை வீசியபடி, கைகளைப் பிசைந்துகொண்டு, கலங்கினாள் குமரி. செட்டியார் முகத்திலே அச்சமோ, கவலையோ தோன்றவில்லை. பரிபூரணத் திருப்தி தாண்டவமாடிற்று.

"குமரி! கூச்சலிடாதே! உனக்குத்தான் தீமை அதனால். நடந்தது நடந்துவிட்டது" என்றார் அவர்.

"அட பாதகா! பதைக்காமல் துடிக்காமல் பேசுகிறாயே, ஒரு ஏழையின் வாழ்வை அழித்துவிட்டு.