பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

குமரிக் கோட்டம்


இதற்கா நீ பக்திமான் வேஷம் போட்டாய்? கோயில் கட்டினாய்? கதியற்ற பெண்களைக் கற்பழிக்கத்தானா, கோயில் கட்ட ஆரம்பித்தாய்? ஐயோ! நான் என்ன செய்வேன்! நீ கொடுத்த லேகியம், என் புத்தியைக் கெடுத்து, உன் மிருகத்தனத்துக்கு என்னைப் பலியாக்கி விட்டதே" என்று பதறினாள் குமரி.

"குமரி! நானும் இதுவரை இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டவனல்ல. யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார் என்னமோ விதிவசம் இப்படி நேரிட்டு விட்டது" என்றார் குழந்தைவேலர்.

"விதி! என்னைக் கெடுத்துவிட்டு.நிலை தவறச் செய்து என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டு, விதியின் மீதா பழி போடுகிறாய்! உன் மகளை, இப்படி ஒருவன் கெடுத்தால், நீ செய்துவிட்ட அக்ரமத்தை ஆண்டவனும் கேட்கமாட்டாரா? பாவி! கோயிலிலே, இந்த அக்ரமத்தை நடத்தினாயே, உனக்கு நல்ல கதி கிடைக்குமா?" என்று அழுதுகொண்டே கேட்டாள் குமரி.

"ஆண்டவன் கேட்பானேன்? இதோ, நான் கேட்கிறேன்" என்று ஒரு குரல் கேட்டு, இருவரும் திடுக்கிட்டுப் பார்க்க, அறை வாயிற்படியில் கோபமே உருவெடுத்து வந்ததுபோல, சொக்கன் நின்று கொண்டிருந்தான்.

"அண்ணா! மோசம்போனேன்" என்று அலறித்