பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

55


சொல்லத் தோன்றுகிறதா? இனி நடக்கவேண்டியதைச் சொல்" என்று சொக்கன் சீறினான்.

"அப்பா! என் பேச்சைக் கொஞ்சம் கேள்; நான் ஏதோ புத்தியில்லாமல் இக்காரியம் செய்துவிட்டேன். நான் குமரியைக் கைவிடுவதில்லை; கடைசிவரை காப்பாற்றுகிறேன்........."

“உன் கூத்தியாராகச் சொல்லுகிறாயா? என் எதிரிலே என் தங்கையை வைப்பாட்டியாக்கு என்று கேட்குமளவு உனக்குத் துணிவு பிறந்ததா?"

"வேறென்ன செய்வது, சொக்கா! நான் வைசிய குலம். ஊருக்கெல்லாம் ஜாதியாச்சாரத்தைப்பற்றிப் பேசுபவன், வேறு ஜாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டதற்காகச் சொந்த மகனையே வீட்டை விட்டுத் துரத்தியவன்......" "அதனால்........." "எங்கள் குலத்தவர் ஆச்சாரம் கெடக்கூடாதே! உலகம் என்னைப் பழிக்குமே, குடும்பமே இழிவாக்கப் படுமே!" "என் குடும்பத்திலே நீ செய்துவைத்த காரியத்துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!" "நான் வைசிய குலம்......." "நான் உப்பிரஜாதி........" "உப்பிரஜாதியில் பெண்கொள்ளும் வழக்கம், வைசிய குலத்தில் கிடையாதே. பரம்பரை பரம்பரையாக