பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

61


கூறின வாதங்களை வீசி, அந்த வைதிகரை விரட்டினார். வெகுண்ட வைதிகர்கள், கோயிலை இடிப்போம் என்று ஆர்ப்பரித்தனர் கூலிமக்களும், தாழ்த்தப்பட்டவர்களும், கலப்புமணம் செய்துகொள்ளச் சம்மதித்த செட்டியாருக்குப் பட்டாளமானது கண்டு, கோபம் கொண்டு, ஓர் இரவு அவர்கள் வசித்த குடிசைகளுக்கு தீயிட்டனர். குய்யோ முறையோ என்று கூவி, மக்கள் ஓடிவந்தனர்.எங்கும் தீ! பசு, கன்று, வெந்தன. பாண்டம் பழஞ்சாமான் தீய்ந்தன. பழனியும் அவன் நண்பர்களும், தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றி வீடு வாசல் இழந்தவர்களனைவரையும், அரைகுறையாக இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, இனி அங்கேயே இருக்கலாம் என்று கூறினர்.

        *                    *                      *

கலியாணம் சிறப்பாக நடைபெற்றது. சொக்கன் சந்தோஷத்தால் மெய்மறந்தான். குமரிக்கு நடப்பது உண்மையா கனவா, என்று அடிக்கடி சந்தேகமே வந்தது. மறையூர் வைதிகர்கள் அன்று "துக்கதினம்" கொண்டாடினர்.

            *              *                 *

நாகவல்லி குமரிக்கு ஆசிரியையானாள். குமரியின் மனம், மொட்டு மலர்வதுபோல ஆகிவிட்டது. கோயில் வேலை நின்று இருந்தது. "என்ன செய்வது இனி?" என்று பழனியைச் செட்டியார் யோசனை கேட்டார். "என்ன இருக்கிறது செய்ய?" என்று பழனி கேட்டான். "ஆலயத் திருப்பணி அறைகுரையாகவே இருக்கிறதே"; என்று செட்டியார் சொன்னார். "கட்டடம் அரைகுறையாக இருக்கிறது; ஆனால் ஆண்டவன்