பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

குமரிக் கோட்டம்


சிலரை அனுப்பிவிட்டு. தந்தையின் கலியாணத்துக்கான ஏற்பாடுகளைத் துவக்கினான். ஜாதியைப் பற்றிய பேச்சையே, செட்டியார் எடுக்கவில்லை. குமரிக்கு, ஏதோ ஒரு கனவு உலகில் இருப்பது போலத் தோன்றிற்று.

             *                    *                   *  

மறையூர் வைதிகர்கள் பதைபதைத்தனர். வைசிய குல திலகர், பக்திமான் செட்டியார், உப்பிரஜாதிப் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்வதா? அடுக்குமா இந்த அனாச்சாரம்? அது, நமது திவ்ய க்ஷேத்திரத்தில் நடப்பதா?" என்று கூக்குரலிட்டனர். செட்டியாரைச் சபித்தனர். ஊரிலே இந்தக் கலியாணம் நடைபெற்றால், பெரிய கலகம் நடக்கும் என்று கூவினர். பழனி, மறையூரிலும் சுற்றுப்பக்கத்திலும் சென்று ஜாதி குலம் என்பதெல்லாம் வீணர்களின் கட்டுக்கதை என்பதை விளக்கிப் பேசினான், கலகம் கல்லடி இவைகளைப் பொருட்படுத்தாமல். ஆதார பூர்வமான அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு, பெரும்பாலான மக்கள், அவனுக்கு ஆதரவுதர முன்வந்தனர். வைதிகர்கள் பயந்துபோயினர், ஜனசக்தி, பழனிபக்கம் குவிவது கண்டு. "இதுபோன்ற இனிமையான அறிவுக்கு விருந்தான பிரசங்கத்தை நான் இது வரை கேட்டதே இல்லை. உன்னை மகனாகப்பெற்ற நான் உண்மையிலேயே பாக்கியசாலி " என்று கூறிப் பூரித்தார், குழந்தைவேல் செட்டியார். தாழையூர் சத்சங்கத்தின் தூதர் ஒருவர், மறையூர் வந்துசேர்ந்து செட்டியாரைச் சந்தித்து, அவருடைய செயலைத் தடுக்க முயற்சித்தார். செட்டியாரோ, பழனி பிரசங்கத்திலே