பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

59


"அம்மா,நீ எனக்குச் சிற்றன்னை என்று பழனி சொல்லக்கேட்டு, மெய்சிலிர்த்தது குமரிக்கு. "வேடிக்கை அல்ல, அவர் என் தகப்பனார்தான்" என்றான் பழனி. "நீங்கதானே யாரோ பெண்ணுடன்................" என்று கேட்டாள் குமரி "ஓடிவிட்டேன்". என்மனைவி சேரிப் புறம் போயிருக்கிறாள், வந்துவிடுவாள். நீ கவலைப் படாதே. நான் உன்பொருட்டு என் தகப்பனாரிடம் சென்று வாதாடத் தீர்மானித்துவிட்டேன். காதல் என்பது மகா பாதகம், ஜாதிக் கட்டுப்பாடே பெரிது என்று சொல்லிவந்தவர், தனக்கே ஒரு காலத்தில் 'காதல்' ஏற்படக்கூடும் என்று எண்ணியிருக்க மாட்டார். இதமாகச் சொன்னால், எல்லாம் நன்மையாகவே முடியும். நீ சோகிக்காதே, தைரியமாக இரு' என்று கூறினான்.

         *                    *                   *

மறுதினம், பழனி தன் மனைவி நாகவல்லியுடன் குமரியையும், கிராமப் பெரியவர்கள் பத்துப்பேரையும் அழைத்துக்கொண்டு, மறையூர் சென்று, தந்தையைச் சந்தித்தான். வெட்கம், துக்கம், பயம் என்னும் பலவித உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட குழந்தைவேல் செட்டியாரால் பழனியிடம் பேசவும் முடியவில்லை.

"பழனி! எனக்கு, என்ன சொல்வதென்றே புரியவில்லை. உன்னை நான் கொடுமைப் படுத்தினேன், குமரியைக் கெடுத்தேன், நான் எவ்வளவு தண்டனைக்கும் தயாராக வேண்டியவன். அவ்வளவுதான் பேச முடியும் என்னால்" என்றார். பழனி தகப்பனாரைச் சமாதானப் படுத்திவிட்டு, சொக்கனைக் கண்டுபிடித்து வருமாறு