பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

63


சிறு விடுதிகளாட்டும், பட்டாளிமக்கள் குடிஇருக்க, குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும். இங்கு அபிஷேகமும் உற்சவமும் நடப்பதற்குப் பதில் அன்பும் அறிவும் பரப்பும் பிரசார ஸ்தாபனம் அமைப்போம். அப்பா! தாங்கள் குமாரக்கோட்டம் கட்ட ஆரம்பித்தீர்கள். அது குமரிக்கோட்டமாக மாறி விட்டது. ஜாதிபேதம் ஒழிந்த இடமாக, காதல் வாழ்க்கைக் கூடமாக, மாறுகிறது. இதுதான் இனி, இந்த மாவட்ட சுயமரியாதைச் சங்க கட்டடம்; நமது 'பிரசார இலாக்கா' என்றான்.

"பேஷ்! பழனி! அற்புதமான யோசனை. ஆலயம் அமைத்து அதிலே, வைதிகர்கள் ஊர்ச் சொத்தை விரயம் செய்வதற்கு வழிசெய்யும் வழக்கத்தை நாம் ஒழித்து விடுவோம், முதலில். இது அறிவாலயமாக, அன்பு ஆலயமாக மாறிவிட்டது என்று செட்டியார் சந்தோஷத்துடன் கூறினார்.

"குமரக்கோட்டம் அமைத்தால், இங்கு கொட்டு முழக்கம், குருக்களின் தர்பாரும், இருந்திருக்குமே யொழியப் பலன் ஏதும் இராது. குமரியின் அன்புக்கு கட்டுப்பட்டு, ஜாதியை குலத்தைத் தள்ளிவிட்ட தாங்கள், இப்போது குமரிக்கோட்டம் அமைத்து விட்டீர். நமது குலத்தவர் இதுவரை எத்தனையோ கோட்டங்கள் அமைத்தனர். ஒருவரேனும், இதுபோன்ற குமரிக் கோட்டம் கட்டினதில்லை. அந்தப் பெருமை தங்களுக்கே கிடைத்தது" என்றான் பழனி.