பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

குமரிக் கோட்டம்


"பழனி ! என் கண்களைத் திறத்தவன் நீ," என்று கனிவுடன் கூறினார் செட்டியார்.

வேறொர் புறத்திலே, நாகவல்லி குமரியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே "பலே பேர்வழி நீ குமரி. உன்பெயரால் கோயிலே கட்டுகிறார்கள் பாரடி" என்று கேலிசெய்து கொண்டிருந்தாள்.

"அவர்கள் சொல்வது தவறு அம்மா! இதற்குப் பெயர் பழனி ஆண்டவர் கோயில் என்று இருக்க வேண்டும்" என்று சாமர்த்தியமாகப் பதிலுரைத்தாள் குமரி.

"அப்படிப் பார்க்கப்போனால், அதுகூடப் பொருந்தாது, 'லேகிய மண்டபம்'; என்ற பெயர்தான் ரொம்பப் பொருத்தம்" என்று கூறிவிட்டு ஓடினாள் நாகவல்லி. அவளைத் துரத்திக்கொண்டு குமரி ஓடினாள். தந்தையும் மகனும் அந்தக் காட்சியைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தனர்!