பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடை பில்லை

101


"“நாளைக்கு அந்தப் பிள்ளை வருகிறார். பெண்ணைப் பார்க்க வேண்டுமாம்; மீனட்சியைப் பார்த்துவிட்டு வேண்டாமென்று சொல்ல ஆள் இருக்கிறானா? வருகிறவர்களுக்கு உபசாரம் செய்ய வேண்டும்; அது சம்பந்தமான வேலை இருக்கிறது. அதோடு...”' என்று அவள் இழுத்தாள்.

“"என்ன தயங்குகிறாய்?” சொல்” என்றேன். 'அவர்கள் வரும்போது இவளுக்கு அலங்காரம் பண்ணிக் காட்ட வேண்டாமா? அதற்கு ஏதாவது நகை இருந்தால் கொடுங்கள். பிறகு திருப்பித் தந்துவிடுகிறேன். முக்கியமாக அந்த ஜடை பில்லையை..."

"அது எதற்கடி பைத்தியம்: கர்நாடக நகையல்லவா அது?” என்றேன். அதன் கதை தெரிந்தால் அவள் கேட்பாளா?

“இல்லை, அம்மா, அது ரொம்ப அழகாக இருக்கிறதம்மா. இவளுக்குப் புதுச் சிவப்பில் அப்படி ஒன்று பண்னிப் போடவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. எங்கள் சாதியில் ஜடைபில்லையென்றால் மதிப்பம்மா”” என்று கெஞ்சினாள்.

அவள் எனக்குச் செய்துவரும் உபகாரத்துக்கு இது எம்மாத்திரம் ஆனால் நான் செய்வது உபகாரமாக இல்லாமல் கடவுளே, முருகா! நீதான் காப்பாற்றவேண்டும், இந்த ஜடைபில்லையினால் ஒன்றும் நேராமல் நீ துணையிருக்க வேண்டும்.

மனசு தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு தவித்தாலும், அவ்வளவு ஆசையாகக் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. முருகனை நினைத்துக்கொண்டு கொடுக்கத் துணிந்துவிட்டேன்.

'“உனக்கு இல்லாமல் எதற்கு வைத்திருக்கிறேன்? ஏதோ இருக்கிற நகைகளைக் கொடுக்கிறேன். ஆண்டவன் அருளால் மீனாட்சிக்கு நல்ல இடம் கிடைத்துச் செளக்கியமாக வாழட்டும்.”