பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடை பில்லை

105



டது” என்றாளாம். மாப்பிள்ளை எப்படியாவது அது வேண்டும் என்றானாம். “அது கிடைக்கும் என்றுதான் உங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஒப்புக் கொண்டேன்” என்றானாம். இப்படியும் உண்டோ?

இதை அவள் சொல்லி அழாக் குறையாகக் கெஞ்சினாள்“‘'என்ன விலையானாலும் கொடுத்துவிடச் சொல்கிறேன்”” என்று சொல்லும்போது அழுகையே வந்து விட்டது..

'என்ன இது? அசடே! அழாதே. இது என்ன பிரமாதம் இல்லாததைக் கேட்காமல் இருக்கிறதைக் கேட்டானே, அதற்குச் சந்தோஷப்படு. அதைப் போய் எதற்காக அவ்வளவு ஆசையாகக் கேட்கிறான்?" :

"அவர் கல் வேலையில் கெட்டிக்காரராம். அது நன்றாக இருக்கிறதாம்..." அவளால் பேச முடியவில்லை.

நான் சிறிது யோசித்தேன். ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். விறுவிறுவென்று உள்ளே போனேன். அந்த ஜடை பில்லயைக் கொண்டு வந்து முருகன் சந்நிதானத்தில் வைத்து நமஸ்காரம் செய்தேன். '“இந்தா சொக்கு நீயும் நமஸ்காரம் செய்து இதை எடுத்துக்கொள்”” என்றேன்.

அவள் நமஸ்காரம் செய்துவிட்டு, "நீங்களே உங்கள் கையால் தாருங்கள்” என்றாள்.

நான் முருகனைத் தியானித்துக்கொண்டே அதை எடுத்தேன்; "சொக்கு, ஆண்டவன்தான் இப்படி ஒரு திருவிளையாடலைச் செய்திருக்கிறான். இந்த ஜடைபில்லையை மீனாட்சிக்குக் கல்யாணச் சீதனமாக நான் கொடுக்கிறேன். அவள் என் பெண். என்னுடைய அம்மா தந்தது. இது. அவள் பேரும் மீனாட்சி. தன் பேரையுடைய பேத்திக்கு இது உரிமையாவதில் அவள் ஆத்மா சாந்தி அடையும், எடுத்துப் போய் மீனாட்சிக்குக் கொடு. அவள் மகராஜியாய் வாழட்டும்." நான் ஆவேசம் வந்தவளேப் போலப் பேசினேன்.