பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண் உரிமை

115திடீரென்று சிந்தனையினின்றும் விழித்துக்கொண்டாள் கல்யாணி அவளுக்கு இப்போது தெளிவு உண்டாயிற்று. சுதந்தரமாகவும் இருக்க வேண்டும்; குடும்பமும் நடத்த வேண்டும். பொருந்தாத இந்தச் சிக்கலைப் பொருந்தும்படி செய்ய ஒரு வழி கண்டுபிடித்து விட்டாள். -

"அம்மா, கணவன் மனைவி இரண்டு பேரும் உத்தியோகம் பார்த்தால் என்ன?” என்று கேட்டாள்.

"கிறிஸ்தவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள்.” "அவர்களும் மனிதர்கள்தாமே? நான் ஒன்று சொல்கிறேன், கேள் அம்மா. நான் என் விருப்பப்படி படிப்பேன். படித்து உத்தியோகம் கிடைத்த பிற்பாடுதான் கல்யாணம் செய்துகொள்வேன். நான் உத்தியோகத்தில் இருப்பதைத் தடுக்காத கணவனாக இருந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்.”

'அவன் உனக்குச் சமைத்துப் போட வேண்டுமாக்கும்!” -

"அது அவன் இஷ்டம். அவன் உத்தியோகம் செய்வதை நான் தடுக்கப் போவதில்லை. அவனும் என்னைத் தடுக்கக் கூடாது...... " .

"என்ன, இன்னும் தர்க்கம் முடிந்த பாடு இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே ராமசாமி வந்தார். சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம் போய்விட்டார். -

***

பரீட்சை முடிந்தது. மிகவும் நன்றாக எழுதினாள் கல்யாணி. அடுத்தபடி கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டும். எப்படியும் அவளுக்கு அரசாங்கத்தாரின் உபகாரச் சம்பளம் கிடைக்கும். திருச்சிராப்பள்ளியா, சேலமா, எங்கே படிக்கப் போவது என்ற யோசனையில் அவள் ஈடுபட்டிருந்தாள்.