பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

குமரியின் மூக்குத்தி



ராமசாமியின் தங்கை கணவர் திருச்சியில் இருந்தார். விடுமுறைக்குக் கல்யாணியைத் திருச்சிக்கு அனுப்பும்படி அவளுடைய அத்தை, ராமசாமியின் தங்கை, எழுதியிருந்தாள். அதன்படி அவரே அவளைக் கொண்டு போய் விட்டு வந்தார். கல்யாணிக்கும் அங்கே போய்க் கல்லூரிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசை.

கல்யாணி திருச்சிக்குப் போனாள். அவளுடைய அத்தை பெண் கமலம் அவளுடன் ஒட்டிக்கொண்டு பழகினாள்; கல்யாணியைவிட இரண்டு வயசு சின்னவள்.

கல்யாணியைப் போலக் கமலமும் நிறையப் பத்திரிகை படிக்கிறவள். ஒரு தொடர்கதை விடாமல் படித்துவிடுவாள். இரண்டு பேரும் கதைகளையும் நாவல்களயும் பற்றிப் பேசிப் பேசிப் பொழுது போக்கினார்கள்.

சுந்தரேசன் என்ற எழுத்தாளர் எழுதி வரும் தொடர் கதையில் கல்யாணி என்ற பெண் சுதந்தர உணர்ச்சியுள்ளவளாக இருப்பதைப்பற்றி இருவரும் பேசினார்கள். அவர் எப்போதுமே பெண்களின் கெளரவத்தைக் குறைக்காமல் எழுதுகிறார். யாரோ பெண்தான் ஆணின் புனைபெயரோடு எழுதுகிருளோ என்று சந்தேகப்படுகிறேன்" என்றாள் கல்யாணி.

"அதென்ன புதுமையாகச் சொல்கிறாயே?’ என்று கேட்டாள் கமலம்.

"அது தெரியாதா உனக்கு? சில பேர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்கள். கதை எழுதுவார்கள். அவர்கள் எழுதுவதாகத் தெரிந்தால், கதையின் மொழி பெயர்ப்பு, அதனால் கிடைக்கும் லாபம், எந்தப் பத்திரிகையில் அது வருகிறது, அதன் ஆசிரியர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்-என்றெல்லாம் மேலதிகாரிகள் கேட்பார்களாம். அந்தத் தொல்லைக்குப் பயந்துகொண்டு புனை பெயர் போட்டுக்கொள்கிறார்கள். சிலர் தம்முடைய