பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரியின் மூக்குத்தி

15

"கையில் இருப்பதை வேண்டாம் என்று கொடுத்து விடுவதா?" என்று உரிமை கொண்டாடியவர்களில் ஒருத்தி கேட்டாள்.

"அப்படி அன்று;அப்படிப்போனதுமறுபடியும் அங்கிருந்து இங்கே பெண் வரும்போது இங்கேதானே வரப்போகிறது?" என்றாள் மற்ற ராணிகளில் ஒருத்தி.

"அப்படியானால் என்னையே சோழகுலத்தில் வாழ்க்கைப்படுத்தி மூக்குத்தியையும் கொடுத்துவிடுவது" என்று இரண்டாம் ராணியின் பெண் சொன்னாள்.

"உன்னைச் சோழ இளவரசன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமே!"என்று மற்றவர்கள் சிரித்தார்கள். "ஏன், நான் முறையுடையவள் அல்லவா?” "நன்றாகச் சொன்னாய்! பட்டமகிஷியின் வயிற்றில் பிறந்தாலொழிய உனக்கு முறை எப்படி உண்டாகும்?" என்று கேட்டாள் ஒருத்தி.

இப்படியாக மறுபடியும் அந்த மூக்குத்தி பாண்டியனுடைய அந்தப்புரத்தில் குழப்பத்தை விளைத்தது. அரசி உலகமுழுதுடையாள் யோசனையில் ஆழ்ந்தாள். பராந்தக பாண்டியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை."இப்போதே அதைப்பற்றிய கவலை எதற்கு?” என்று மேலுக்கு அவன்சொல்லிவிட்டான்.ஆனாலும் நாளைக்கு இந்தச் சிக்கல் வந்தால் எப்படியாவது முடிவு காணத்தானே வேண்டும் என்ற கவலை மாத்திரம் அவன் உள்ளத்துள் இருந்தது.

மகாராணி இந்தச் சிக்கலைப்பற்றி யோசித்தாள். ஒரு முடிவும் அவளுக்குத் தோன்றவில்லை. ஒரு நாள், வெள்ளிக் கிழமை, இங்கே தேவி கன்னியாகுமரியைத் தரிசிக்க வந்திருந்தாள். "தாயே, இதற்கு நீ தான் ஒரு வழி காட்ட வேண்டும்” என்று அவள் பிரார்த்தித்தாள். அப்போது தேவியின் மூக்கில் இருந்த மூக்குத்தி பழையதாகப் போன படியால் கீழே விழுந்துவிட்டது. தான் பிரார்த்தனை செய்யும்போது அது விழவே, மகாராணி அதையே தேவி