பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுதாயும் கன்றும்

23

அப்போது மற்ருெரு குரலும் எழுந்தது. பாலகிருஷ்ணன் மனைவி நல்லம்மாள்தான் பேசினாள்."அதன் அதன் தாய்ப்பால்வகையாக இருந்தால் குழந்தை நன்றாகத்தான் இருக்கும்” என்று அவள் சொன்னாள்.

அவள் பேச்சு அவள் மாமியாருக்கு எரிச்சலை உண்டாக்கியது. "ஆமாம், நீ ரொம்ப கண்டு விட்டாய்! தாய்ப் பாலைப்பற்றிப் பேச உனக்கு ஏது வாய்?" என்று சீறினாள்.

மூன்றாவது பேர்வழியை வைத்துக்கொண்டு அவள் அப்படிப் பேசினது நல்லம்மாளுக்குப் பிடிக்கவில்லை."தாய் என்றால் எல்லாம் தாய்தான். அதன் பாலைக் கன்றுக் குட்டிக்குக் கொடுத்து வளர்க்கத் தெரியாதவர்களுக்கு மாத்திரம் தாய்ப் பாலின் அருமை தெரிந்துவிடுமா, என்ன?"-அவள் பேச்சில் சிறிது பலமாகவே வெறுப்புத் தொனித்தது. ரோசம் கொண்ட பேச்சு அல்லவா அது?

இப்படிப் புயல் மூண்டவுடன் எதிர்வீட்டுப் பெண் நாகரிகமாக விலகிக்கொண்டாள்."கடைக்குப் போய்ச் சாமான் வாங்க வேணும். நான் நாளைக்கு ஊருக்குப் போகிறேன், அத்தை” என்று சொல்லி விடை பெற்றாள்.

வாசல் திண்ணையில் இத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்தான் பாலகிருஷ்ணன்; அவனுக்குக்கூடத் தன் தாயிடம் கோபம் வந்தது. அயலாருக்கு முன் அவள் நல்லம் மாளைப் பழித்தது அவனுக்கும் பொறுக்கவில்லை. வார்ப்புரு:* * * "இல்லை அம்மா, கன்றுக்குட்டியை இன்னும் கொஞ்சம் விட்டுப் பிறகு பிடி, அம்மா!"

"இது என்னப்பா புதிய பேச்சு?"

"புதிசு அல்ல.கன்றுக்குட்டி நன்றாக இராவிட்டால் முனிசிபாலிடியில் அபராதம் போடுகிறார்களாம். பால் வியாபாரமே பண்ணக் கூடாதென்று தடுத்து விடுகிறார் களாம்" என்றான் பாலகிருஷ்ணன்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் நல்லம்மா