பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

குமரியின் மூக்குத்தி

ளுக்கு நன்றாக விளங்கிவிட்டது. "நீ இப்படி மனம் கசந்து கொள்கிறாய்? அந்தக் குழந்தையைப் பார்த்தது முதல் எனக்கே மனசு இரங்கிவிட்டது. நான் பண்ணுகிற அக்கிரமம் புரிகிறது. ஏதாவது தந்திரம் பண்ணி அம்மாவை ஏமாத்தலாம். அம்மா ஏமாந்தாலும் தப்பு இல்லை; கன்றுக் குட்டியும் நீயும் ஏமாந்து போகக் கூடாது" என்று அவன் தனிமையிலே சொன்ன வார்த்தை இப்போது செயலாக உருவாகிறது என்று விளங்கியது.

அன்றுமுதல் கன்றுக் குட்டியின் பாடு குஷிதான்.

***

ஆறு மாதம் கழித்து எதிர்வீட்டுப் பெண் மறுபடியும் வந்திருந்தாள்.அவள்தங்கைக்குக் கல்யாணம்,அதற்காக வந்தாள். பாலகிருஷ்ணன் வீட்டுக் கன்றுக்குட்டி வாசலில் வந்ததைப் பார்த்தாள். தன் வீட்டு வாசலில் இருந்தபடியே பாலகிருஷ்ணன் தாயை,"அத்தை, வேறே மாடும் கன்றும் வாங்கியிருக்கிறீர்களா?" என்று கேட்டாள்.

"இல்லை, இல்லை, பழைய மாடுதான்.” "பின்னே!" அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது."எல்லாம் நீ கற்றுத் தந்தவித்தை” என்று பதில் வந்தது.

"மருமகள் செளக்கியமா?” என்று அந்தப் பெண் கேட்டாள். அடுத்த கணம் பழைய காட்சி நினைவுக்கு வந்ததனால் 'ஏன் கேட்டோம்' என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்த சீறல் தோன்றவில்லை. "அவள் பத்துநாள் பிறந்த வீட்டில் இருந்துவிட்டு வரப்போயிருக்கிறாள்" என்றாள் பாலகிருஷ்ணன் தாய், முகமலர்ச்சியுடன். "என்ன விசேஷம்?" "சாமி கண் திறந்துபார்த்திருக்கிறார்"என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்து நின்ற கன்றுக் குட்டியை அந்தக் கிழவி தடவி கொடுத்தாள்.