பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 - குமரியின் மூக்குக்கி

உழைப்பும் அறிவும் உடைய எங்கள் தலைவர்' என்று பிரசங்க தோரணையில் சொன்னான் முருகேசன்.

"நீ என்னப்பா சொல்கிறாய்?" என்று அத்தை நிதான மாகக் கேட்டாள். - -

'கடவுள் மறுப்புக் கட்சியின் தலைவர்" என்றான் முருகேசன். - - -

"நம்முடைய வீட்டில் உள்ள படங்களே யெல்லாம் எடுத்துவிடும்படி சொன்ன மகாநுபாவன் இவன்தானா?” என்று கோபத்தோடு கேட்டாள். - . . .

"அப்படிச் சொல்லாதே, அத்தை அவர் பெரிய அறிவாளி.”

"தெய்வம் இல்லையென்று சொல்கிறதற்குப் பெரிய அறிவு வேண்டுமா?" என்று அத்தை கேட்டாள்.

"தெய்வம் உண்டு என்பதற்கு எவ்வளவு அறிவு வேண்டியிருந்தது? எவ்வளவு சாஸ்திரங்கள் வேண்டி யிருந்தன? அவற்றை யெல்லாம் கீழ்ப்படுத்தித் தெய்வம் இல்லை என்று சாதிப்பதற்கு இன்னும் பெரிய அறிவு: வேண்டாமா, அத்தை யோசித்துப் பார்” என்று நியாயம் பேசினான் அவன். -

அவனுடைய வக்கீல் வாதம் அந்தக் கிழவிக்குப் புரிபடவில்லை. 'இதெல்லாம் கல்லதுக்கு வரவில்லை!" என்று தன் வழக்கமான தீர்ப்போடே அவள் விலகிக் கொண்டாள். - . . . . ;

அத்தையிடம் வாயடி கையடி அடித்துப் பேசினலும் முருகேசனுக்கு வேறு ஒன்று அடிக்கடி எதிர்நின்று கேள்வி கேட்டது. அதுதான் அவனுடைய மனச்சாட்சி.

எதற்கெடுத்தாலும் கடவுள் என்றும், சாமியாரென் றும் தேடிச்சென்ற குடும்பம் அது. கோபுரத்தைக் கண் டால் கைகள் தாமே குவியும்; பெரியவர்களைக் கண்டால்

தலை தானே தாழும். இந்தப் பண்பு முருகேசனுடைய

உடம்பிலே ஒட்டியிருந்தது; உள்ளத்தில் ஊன்றியிருந்தது.