பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளும் புறமும் 49 ஆகவே, ஒவ்வொரு நாளும் அவனுடைய மனத்துக் குள் ஒரு பெரும் புயல் அடித்துக்கொண்டே வந்தது. க. ம. கட்சிக் கூட்டத்தில் இருக்கும்வரையில் அவனுக்குத் தான் தைரியமாகச் சீர்திருத்த நெறியில் கடப்பதாக ஒரு பெருமை தோன்றும். வீட்டுக்கு வந்தாலோ பல காலமாக வைத்திருந்த பொருள் ஒன்றை இழந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்படும். வீதியில் ஏதேனும் தெய்வ ஊர்வலம் போனல் அவன் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரமாட் டான். ஆனாலும் அவன் மனசு பக் பக்கென்று அடித்துக் கொள்ளும். -

வீட்டில் இருக்கிற படங்களே யெல்லாம் எடுத்து விட்டதோடு நின்றிருந்தால்கூட அவனுக்கு இத்தனை சங்கடம் உண்டாயிருக்காது. பூஜை அறை என்ற இடத்தை இப்போது படிப்பறை யாக்கிக்கொண்டான். அங்கே உள்ள நடராஜர் படத்தையும் எடுத்துவிட வேண்டும் என்ற முயற்சி தலைப்பட்டபோதுதான் அவனுக்கு விளங்காத வேதனை உள்ளத்தில் தோற்றியது. தன் கட்சிக்காரன் ஒருவனே ஒரு நாள் அந்த அறைக்குள் அழைத்து வந்தான். அந்த மனிதன் கண்ணில் நடராஜர் படம் பட்டுவிட்டது. 'என்ன ஐயா, இது? வெளியிலே வேஷம் போடுகிறது போலக் கூடத்திலே இருக்கிற படங் களே மாத்திரம் கழற்றினாய். இந்த இடத்திலே இது தாண்டவமாடுகிறதே!" என்று பரிகாசம் செய்தான்.

"அதையும் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் உண் மையைச் சொல்லப் போனால் படங்கள் நிறைந்திருந்த வீட்டில் ஒரு படங்கூட இல்லாமல் இருந்தால் ஏதோ மாதிரி இருக்கிறது." -

"அதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாயோ? யாராவது கண்டால் சிரிக்கப் போகிறார்கள் அப்படிப் படம் வேண்டுமென்றால் இந்த நடராஜன் படம் எதற்கு ?நம் அருமைத் தலைவ்ர் நடராஜன் படத்தை இங்கே

குமரி-4