பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரியின் மூக்குத்தி

மாட்டிவிடலாமே!” என்று வந்த நண்பன் யோசனை கூறினன்.

"சரியான யோசனை! உன் அறிவை மெச்சுகிறேன்" என்று சொல்லிக் குதித்தான் முருகசேன்.

முருகேசன் தன் வீட்டில் தலைவருடைய படத்தை மாட்டினான். பிரதிஷ்டை செய்தான் என்று சொல்வது வைதிக சம்பிரதாயம்; ஆதலால்,அப்படிச் சொல்லக்கூடாது.ஆனால் உண்மையில் அந்தநிகழ்ச்சிபிரதிஷ்டையைப் போலப் பெரியநிகழ்ச்சியாகவே அமைந்தது. 'தலைவர் படத் திறப்புவிழா'வை மிக விமரிசையாக நடத்தினான்.அதற்கு அந்தத் தலைவரும் வந்திருந்தார். அந்தப் படத்தைக் கூடத்தின் நடுவில் மாட்டி வைத்தான் முருகேசன். அன்று அவனுடைய கட்சி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள்.தூபதீப நைவேத்தியம் என்று சொல்லா விட்டாலும் படத்தைச் சுற்றி விளக்குப் போட்டிருந்தான். ஊதுவத்தி ஏற்றி வைத்தான்.எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கினான்.

படங்களையெல்லாம் எடுத்துவிட்டபோது அவனுக்கு இருந்த மனப்போராட்டம் இப்போது இல்லை. 'அந்தக் கூடம் சூனியமயமாக இருந்ததைக் காண அவனுக்குப் பொறுக்கவில்லை; இப்போது தலைவர் படத்தை மாட்டிய பிறகு அவன் முகத்தில் மலர்ச்சி வந்துவிட்டது” என்று அவனோடு நெருங்கிப் பழகினவர்கள் சொன்னார்கள்.

கடவுள் மறுப்புக் கட்சித் தலைவர் வீட்டில் சில நண்பர்கள் கூடியிருந்தார்கள். முருகேசன் வரவில்லை. எல்லோரும் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

'முருகேசன் வீட்டுப் படத்திறப்பு விழா எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது' என்று ஒருவர் கொண்

"முருகேசனுக்குத் தலைவரிடம் உள்ள பக்தி..."