உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஉள்ளும் புறமும்

51

"என்ன, பக்தியா? அந்த வார்த்தையை எதற்கப்பா இங்கே கொண்டு வருகிறாய்?"

"சரி, பக்தி வேண்டாம்.அன்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.அவருக்குத் தலைவரிடம் உள்ள மதிப்பு, மரியாதை, அன்பு எல்லாம் ஒரு தனி ரகம்.தம்முடைய குடும்பத்துக்கு ஏற்ற முறையிலே அந்த அன்பைக் காட்டு கிறார். அவருடைய போக்கிலே பழமையும் புதுமையும் கலந்து விளங்குகின்றன."

"என்ன ஐயா, சும்மா அளக்கிறாய்?பழமையாவது, புதுமையாவது!மனிதன் தன் வீட்டுப் படங்களை யெல்லாம் அகற்றிப் பெரிய புரட்சி பண்ணிவிட்டான். அங்கே பழமை எது?” என்று ஒருவர் கேட்டார்.

"நாள் தவறினாலும் தலைவர் படத்துக்கு மாலை போடுகிறது தவறுகிறதில்லை. ஊதுவத்தி ஏற்றுவது தவறுவதில்லை. விளக்கு ஏற்றுவது தவறுவது இல்லை."

"சரிதான். நமக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவதுதான் பாக்கி போல் இருக்கிறது!" என்று புன்முறுவலுடன் தலைவரே பேசினார்.

"அவருடைய அன்பை நாம் பாராட்ட வேண்டும்” என்று இடையிலே தம் கருத்தை உரைத்தார் ஒருவர்.

"நான் அன்பு இல்லை என்றா சொல்ல வருகிறேன்? வெளி விளம்பரம் இல்லாமல் அந்தரங்க அன்போடு முருகேசன் இருக்கிறார் என்பதையே இந்தச் செயல் காட்டுகிறது. ஆனாலும்...” தலைவர் மேலே பேசுவதற்குள், "ஆனாலும் இது பழைய பண்பாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ?" என்று ஒருவர் கேட்டார்.

"இல்லை, இல்லை. பழமை, புதுமை என்ற வேறு சிலவற்றிற்கு இல்லை. மலரால் அலங்காரம் பழமை என்று தள்ளிவிட முடியுமா? ஊதுவத்தி வைப்பது பழமை என்றால் நமக்கு நல்ல மணம் வேண்டாமா? ஆனால்