பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தில் முள்

75

சாக அமைய வேண்டும் என்பது அவர் எண்ணம். கலைஞனுக்குத் தான் படைக்கும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனி யழகு பொலியும்; தொழிலாளியோ எல்லாவற்றையும் ஒன்று போலச் செய்வான். தான் செய்ததையே பார்த்து மறுபடியும் அதே அச்சாகச் செய்யும்போது கலைஞனுக்கு அலுப்புத் தட்டிவிடும். வெறும் கைவேலை மட்டுந்தானே? புதிய கற்பனைக்கு இடம் இல்லாமற் போய்விடுகிறதல்லவா?

விசுவநாத ஆசாரியார் நிலையும் அப்படித்தான் இருந்தது. புதியதாக மற்றொரு மூர்த்தியைச் செய் என்றால் மிகவும் எளிதில் மகிழ்ச்சியோடு செய்துவிடுவார். இப்போது ஒரு நிர்ப்பந்தத்தில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார். இம்மி பிச்காமல் அதே மாதிரி அமைய வேண்டும். ஏன்? அவராக வருவித்துக்கொண்ட சங்கடம் அது.

***

விசுவநாத ஆசாரியாருக்குத் தச்சு வேலைதான் இளமையில் அவர் தகப்பனார் சொல்லித் தந்தார். ஆனால் அவர் கையில் வெறும் தச்சுத் தொழிலாளியின் நரம்பு ஒடவில்லை. சிற்பக் கலைஞனுடைய ஆற்றல் அதற்கு, இருந்தது. நாய், யானை, மனிதன் என்று உருவங்களை இளம்பிராயத்தில் செதுக்கத் தொடங்கினர். பிறகு தேரில் பதிக்க வேண்டிய உருவங்களில் பெரும்படியான வேலைகளைச் செய்தார். அப்பால் நுட்பமான வேலைகளையும் செய்யத் தெரிந்துகொண்டார்.

அவருடைய பால்ய சிநேகிதர் பரமசிவ சாஸ்திரியார். ஒரே பள்ளிக்கூடத்தில் நாலு வகுப்பு வரையிலும் ஒன்றாகப் படித்தார்கள்; அதற்குமேல் இருவரும் அந்தப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். சாஸ்திரி யாருடைய தகப்பனார் பெரிய ஜோசியர்; வடமொழியிலும் மந்திர சாஸ்திரங்களிலும் வல்லவர். அவர் தம்முடைய பிள்ளைக்கு, மிலேச்சபாஷை வேண்டாமென்று நிறுத்திக்