உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குளிர்ச்சி

93

சாப்பிட வேண்டாம்” என்றாள் அவள். பேச்சில் புதிய குழைவு ஒன்று கலந்திருந்தது.

'நீ அவனுக்குப் பிரியமாக இருந்து வாழ்வது முதல் காரியம். அடக்க ஒடுக்கமாக நீ வாழ்ந்தால் அதுவே போதும்.”

அவள் தலையைக்கவிழ்த்துக்கொண்டாள். சட்டென்று பேச்சு வரவில்லை. கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

"ஏன் அம்மா அழுகிறாய்?" என்று தழுதழுத்த குரலோடு கேட்டான். -

"இப்போதுதான், அப்பா, நான் பெண் என்பதை உணர்ந்தேன். நான் வேலைக்குக்கூடப் போகப் போவதில்லை. அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.”

அதற்குள் வாசலிலிருந்து பெரியசாமி, "என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டான். மாணிக்கம் வெளியே வந்தான்; "அப்படியானால்....."

"நீங்கள் எங்களோடு இருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டும்.”

மாணிக்கம் தென்னமரத்தைப் பார்த்தான். தென்னங் குலைகள் பச்சைப் பசேலென்று காட்சி அளித்தன. தென்ன மட்டை சலசலத்தது. -

தென்ன மட்டைகளினூடே தெரிந்த வானம் நீலகிறம் காட்டிக் குளிர்ச்சியை ஊட்டியது. உலகமே குளிர்ச்சி மயமாக ஆகிவிட்டதோ!