பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92.

குமரியின் மூக்குத்தி

என்ன பரிசு? அழகுதான். மாணிக்கம் அந்தக் கட்டிடக்காரருடைய காரியாலயத்தில் வேலைக்காரன்.

செய்தியைக் கேட்டு மாணிக்கம் அயர்ந்து போனான். உண்மை யென்று நம்ப முடியவில்லை. அழகுவுக்கும் ஒரு கணவனா?

பெரியசாமி அழகுவை மணம் செய்ய விரும்பியது கட்டிடக்காரருக்கு வியப்பாக இருந்தது. "இவளை ஏன் அப்பா கேட்கிறாய்?" என்று கேட்டார். "எனக்கு நல்ல மனைவி வேண்டும்” என்று அவன் சுருக்கமாக விடை கூறினான்.

திருமணம் ஆயிற்று; மாணிக்கம் ஆனந்தக் கண்ணீர் சிந்தினான்; அதில் துயரமும் கலந்திருக்கலாம்.

அழகு ஒரு வாரமாகக் குடித்தனம் செய்தாள். மாணிக்கம் போய்ப் பார்த்து வந்தான். அந்த ஒரு வாரமும் பெரியசாமியும் வேலைக்குப் போகவில்லை; அழகுவும் போக வில்லை.

ஒரு வாரம் ஆயிற்று. அழகுவும் அவள் கணவனும் மாணிக்கத்தை வந்து பார்த்தார்கள். 'மாமா, என்னுடைய ஆசையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்” என்றான் பெரியசாமி.

"என்ன அப்பா வேண்டும்?"

"நீங்களும் குழந்தைகளும் என்னுடனே வந்து இருக்க வேண்டும்."

மாணிக்கம் யோசித்தான்."நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். நான் உங்களுக்கு மூத்த பிள்ளை."

மாணிக்கம் தென்ன மரத்தைப் பார்த்தான். குடிசைக்குள் இருந்தாள் அழகு. "நீயும் சொல்லேன்” என்று குரல் கொடுத்தான் பெரியசாமி.

"அப்பா, இங்கே வா' என்றாள் அழகு. அவன் உள்ளே போனான். "ஆமாம்; அவர் சொல்கிறபடி எங்களுடன் வந்துவிடு. இனிமேல் சமைத்துச்