பக்கம்:குமாரி செல்வா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

‘எனக்கு மனைவி யிருந்தாலல்லவா அவள் உரிமையைப் பறிப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்!’

‘அப்போ நான் உங்கள் காரியதரிசி வேலைக்கு மனுச் செய்யட்டுமா, ஸார்?’ என்று கேட்டுச் சிரித்தாள் அக் கொஞ்சம் குரலி.

‘ஏன்! அப்படியே மனைவி அந்தஸ்துக்குப் புர மோஷன் பெற்று விடலாம் என்ற சூழ்ச்சியோ?’ என்று கேட்கும் துடிப்பு பிறந்தது என் உள்ளத்தில். ஆனால் துணிவுதான் பிறக்கவில்லை. அவளேயே பார்த்தபடி அமர்த்திருந்தேன்.

சிரிக்கும் ஒளிர்மிகு கண்களை, சிரிப்பு நீந்திய செவ்விதழ்களை, சிரித்த பங்கயமன்ன அம் முகத்தையே நான் கவனித்திருந்ததைக் கண்ட குமாரி அருவிச் சிரிப்பு சிந்தி விட்டு ஓடினாள். மறைந்தாள்.

சில நிமிஷங்கள் ஓடின. கலீன் கலினெனச் சலங்கைகள் கட்டியம் கூற, களுக் கிளுக்கென்று இனிய சிரிப்பு கவிதை யொலி சிந்த அழகுக் கனவு போல் அசைந்தாடி, நெளிந்து வளைந்து வந்தாள் குமாரி. இப்போது அந்த ஆடும் மயில் பாவாடை தாவணியுடன் காட்சி தரவில்லை. பைஜாமா அணிந்து, மேலே தொள தொளத்த நீண்ட அங்கி தரித்து, தோளிலே நீண்ட துணி ஒன்றை அலட்சியமாகப் போட்டிருக்தாள். கழுத்தசைத்துக் கர்வ நடை பயிலும் மணிப்புறா போலே வந்த குமாரி 'குகுகூ குகூ' என்று கொஞ்சுகிற சிரிப்பும் கள்ளப் பார்வையும் சிந்தி நாற்காலிக் கைமீது ஒய்யாரமாக அமர்ந்தாள்.

நானிருந்த நாற்காலி மேல் அல்ல. தனியாகக் கிடந்த நாற்காலியின் கையிலேதான். ‘பலே கைகாரியாகத்தான் தோன்றுகிறாள் குமாரி!’ என்று நினைத்தேன். இதைத் தொடர்ந்தது பல ‘டர்னிங் ஸீன்’கள். ஒளி அணைந்து பேரொளி பூப்பதில்லை. மற்றப்படி அந்த அறை அற்புத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/18&oldid=1310419" இலிருந்து மீள்விக்கப்பட்டது