உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாரி செல்வா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அவ்வளவு உனர்ச்சிகளையும் அனுபவிக்க நேர்ந்தது எதிர்பாராவகையிலே.

ஆசிரியர் அறையின் ஆடும் கதவு சூறைக் காற்றால் மோதுண்டதுபோல் படீரெனத் திறந்தது. பரமசிவம் எரிந்து விழுவதற்குள் திடும் பிரவேசம் செய்தாள் ஒரு யுவதி. அந்த இதழின் அட்டைச் சித்திரம் நேரடி விஜயம் செய்திருப்பதை உணர்ந்ததும் எரிக்கும் பார்வை சிந்தாமல் இனிய சிரிப்பையே உதிர்த்தார் பரமசிவம்.

‘குமாரி செல்வாவுக்குக் குதித்துக் குதித்தோடி வரத்தான் தெரியுமே தவிர, தென்றல் நடை நடக்கத் தெரியாது போலும்!’ என்றார் அவர்,

‘போதும்!’ எனச் சிடுசிடுத்தாள் சிங்காரி. நீலப் பாவாடை அலையென ஆட, ரோஜா நிறத் தாவணி அசைந்தாட, இரட்டைப் பின்னல் நெளிந்தாட, கரு விழிகள் நில்லாது சுழன்றாட ஓடி வந்த குமாரி அமைதியாக நிற்கத் தெரியாதவள் போல் அசைந்தாடி நின்றது ஆசிரியரின் விமர்சனத்திற்கு அழுத்தம் கொடுத்தது.

‘உட்காரலாமே!’ என்றார் அவர்.

‘இங்கு நான் கூட்காருவதற்காக வரவில்லை’ என்று சிணுங்கினாள் எழிலி.

‘சந்தோஷம். அப்போ தாராளமாக நில்லுங்கள்’ எனக் கனைத்தார் பரமசிவம்.

‘சும்மா நின்று கொண்டிருப்பதற்காகவும் வரவில்லை!’ என்று சீறினாள் பாவை.

‘ரொம்ப சந்தோஷம். கோல மயில் போலக் குதித்தாடுங்கள், அன்னப் புறா போலே வட்டமிட்டு........’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/6&oldid=1892228" இலிருந்து மீள்விக்கப்பட்டது