பக்கம்:குமாரி செல்வா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

‘நிறுத்துங்கள் ஸார்!’ என்று பாய்ந்தது அவளது கட்டளை. ஆசிரியர் திகைத்து விட்டார். அவர் மேலும் திகைக்கும்படி சொன்னுள் அவள் :

‘நீங்கள் மகத்தான தீங்கு இழைத்து விட்டீர்கள். எனக்கு இதைவிட வேறு அகெளரவம் என்ன வேண்டும்?’

‘என்ன ? என்ன விஷயம்?’-உண்மையாகவே அவருக்கு விளங்கவில்லைதான்.

‘என்னைப் பற்றி தப்புக் தவறுமாக எழுதி விட்டு......’

‘அப்படி ஒன்றும் தவறுதலாக எழுதவில்லையே! உங்களுக்கு ஐஸ் க்ரீம் பிடிக்கும் என்று எழுதியது தப்பா? தினம் ஒரு டஜன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவாள் என்றது தவறா ? கன்றுக் குட்டிபோல் குதித்தோடி வரும் குணம் என்று குறிப்பிட்டது......’

‘அதெல்லாமில்லை. வர்ணனையில்...’

‘பாவாடையழகியாகக் காட்சி தரும் செல்வா பைஜாமா சுந்தரியாகத் திகழ்வாள் திடீரென்று. ஸாரி கட்டிய சிங்காரியாக மாறுவாள். கவுனணிந்த கட்டழகி பரட்டைத் தலையுடனே காட்சி தருவாள். ஒற்றைச் சடை ரெட்டைப் பின்னல்களாகத் துவளும்....இதை ஆட்சேபிக்கிறீர்களா?’ என்று கேட்டார் அவர்.

‘இல்லை’

‘ஊம்?...விஷயத்தை விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்’ என்று மனுச் செய்தார் ஆசிரியர்.

உயரம் ஐந்தடி மூன்றங்குலம் நிறம்-ரோஜாப்பூவேதான். கிறை நூற்றுப்பத்து பவுண்டு. பாடி 33¼ அங்குலம். இடுப்பு 32¼ அங்குலம்; இடை 31¼ அங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/7&oldid=1321982" இலிருந்து மீள்விக்கப்பட்டது