உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

13



தங்கக் கம்பி போலிருக்கிறது. பாட்டுச் சொல்லிக் கொடுத்தால் ரம்மியமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள். எனக்கோ இன்னமும் கலியா —

நாடக வண்டிகளைப் பார்க்கக்கூடாது என்றிருந்தவள் அன்று பார்க்க வேண்டியதாயிற்று. "குமாஸ்தாவின் பெண், குமாஸ்தாவின் பெண்!" என்று கூறினர். நானும் ஒரு குமாஸ்தாவின் பெண்தானே! ஆகவே நோட்டீசை வாங்கச் சொன்னேன். சாந்தா ஓடிப் போய் வாங்கிக் கொண்டு வந்தாள். கதைச் சுருக்கம் அதில் இருந்தது. அசல் எங்கள் குடும்பக் கதைதான். ஆகவே இந்த நாடகத்தை எப்படியாவது போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆசை பிறந்தது, அப்பாவிடம் சொன்னேன். அவர் என்ன செய்வார் பாவம், "கண்ணில்லை யோடி காந்தா, பெரிய பெண்ணாயிருக்கே, நோக்குத் தெரியாதோ நம்ம ஆத்துக் கஷ்டம்" என்று சொன்னார். வறுமை பிடித்து வாட்டும் நாங்கள் குடியிருக்கும் வீட்டுப் பக்கமாக, பாழாய்ப் போன சினிமா, டிராமா வண்டிகளும், பட்டுப் புடவைகாரனும், பம்பாய் சேட்டும் ஏன் தான் வரவேண்டும்? நாசமாய்ப் போகிறவாள் எங்களை வறுமையோடாவது விட்டு வைக்கக்கூடாதா? இல்லாதவாளிடம் வருவானேன், இது வேண்டுமா, அது வேண்டுமா என்று கேட்பானேன்? இப்படிச் சித்திரவதை நடக்கிறதே உலகில் சிவனே என்று அவாளவாள், அவாவா காரியத்தைக் கவுனிச்சுண்டேதான் இருக்கா? மனுஷ்யர் மட்டுமா, தெய்வங்கூட சும்மா தான் இருக்கு.

இரண்டாம் வாரம், மூன்றாம் வாரம் 'குமாஸ்தாவின் பெண்' நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் எனக்கு ஓயாத தொல்லை. அப்பாவுக்கு சங்கடம், என் முகத்தைக் கண்டு அவரால் சகிக்க முடியவில்லை.

"காந்தா, நாளைக்கு ரெடியா இரு, நாடகம் செல்வோம், சாந்தாவும் வரட்டும்" என்று ஒரு தினம் அப்பா சொன்னார்.

"என்ன வாலிபந் திரும்புகிறதோ, குடும்பம் கிடக்கிற கிடப்பிலே நாடகம் வேறே வேண்டியிருக்கோ, இங்கேதான் நல்லதங்கா நடக்கிறதே, நாடகம் போறாராம் நாடகம்"