உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அறிஞர் அண்ணா



என்று அம்மா கோபத்தோடு கூறினார்கள். வாஸ்தவந்தானே, அந்த முக்கால் ரூபாய் இருந்தால் எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவோ சௌகரியம்.

நாடகம் சினிமா இவைகள் இருக்கும் உலகத்திலே பணப் பஞ்சம் ஏன் இருக்க வேண்டும்? குமாஸ்தாவின் பெண் நாடகம் எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமோ? என்ன அருமையாக நடிக்கிறார்கள் TK சண்முகம் கம்பெனியார். இராமு வேடத்திலே சண்முகம் நடிப்பது எல்லோருக்கும் பிடித்தது. சீதா இறந்ததுகேட்டு இராமு, சீதா! சீதா, என்று அலறிக்கொண்டு ஒடும் பொழுது, மனது துடிக்கிறது. சீதாவாக நடிக்கும் சிறுவன் அசல் பெண் போல்தான் தெரிகிறான். சீதாவின் தங்கை சரசுவாக MS திரௌபதி என்ற பெண் ஜோடியாக நடிக்கிறாள். "நீங்கள் மிராசுதாரர், உங்காத்துலே விதவிதமாகக் குடங்கள் இருக்கும். எங்களுக்கு இருப்பது இந்த ஒரு குடந்தான்" என்று சரசு கூறும்போது கசியாதவர்கள் இல்லை. குமாஸ்தாவாக நடிப்பவர் ரொம்ப நன்றாக நடித்தார். ஆமாமா, யாரைச் சொல்லி யாரைச் சொல்லாமல் விடுகிறது. நீஙகள் பார்க்க வேண்டும் அவ்வளவுதான். நான் எவ்வளவு சொன்னாலும் போதாது, புரியாது போங்கள்.

கதை தெரியுமோ, முதல் தரமானது. ஒரே ஒரு குமாஸ்தா. எங்கப்பா போல் அவருக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண். எங்காத்திலே நாங்கள் இருப்பது போல் சீதா மூத்தவள், நல்ல அழகி. சரசா இளையவள் எங்கள் சாந்தாபோல். அழகு, குணம் எல்லாம் என் தங்கை போலத்தான். வறுமை பிடுங்கித் தின்றது. எங்காத்திலே இருக்கிற கஷ்டம் தான். சீதாவுக்கு இராமு என்ற ஒருவன் மேலே ஆசை. அவனுக்கோ கோயில் குளம், பூசை, புத்தகம் முதலியவற்றிலே ஆசை. அவளையும் கலியாணம் செய்து கொண்டு அவன் கோவிலுக்குப் போவதை எந்தக் கடவுள் வேண்டாமென்று கூறிவிடுமோ தெரியவில்லை. அவன் கல்யாணமே கூடாது என்று கூறி விட்டான். எந்தக் கோயிலும் பிள்ளையார் கோயில் தவிர, தேவி இருக்கே. நாம் ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்,